பக்கம்:முன்னும் பின்னும்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 105

(எ-று) மின்னத் தாழை மலர்தலும், மயில்கள் ஆரவாரித்தலும்

இயற்கை. பேதை-காதலர் சொல்லில் நம்பிக்கையற்றமையிற் பேதையான குறித்த கார்காலத்திலும் வாராதாரிடத்துக் காதலறாமையின் பேதையான என்றுமாம். மெய்ப்பாடு - அழுகை, பயன் : ஆற்றாமையறிவித்தல். உரையாசிரியர் : திருக்கண்ணபுரத்தலத்தான் திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன், தமிழ்ப்பண்டிதன், மதரஸே இஸ்லாமியா, வாணியம்பாடி, 5.10.1915.

கண்ணில் வந்து மின்னல்போல் காணுதே - இன்பக்

காவியக் கலையே ஓவியமே

சுடர் மின்னல் கண்டு தாழை மலர்வதுபோல

உனைக்கண்டு உள்ளமே மகிழ்ந்தேனே படம் : நாடோடி மன்னன்(1958), பாடலாசிரியர் : சுரதா, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், ஜிக்கி.

மண்டினிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

வளித்தலைஇய தீயும்

தீமுரணிய நீரு மென்றாங்

கைம்பெரும் பூதத் தியற்கை போல... நூல் : புறநானூறு, பாடல் : 2, பக்கம் : 4. சேரமான் பெருஞ்சோற்றுதியஞ் சேரலாதனை முரஞ்சியூர் முடிநாகனார் LlfΤΙη-u-jξl.

அணுச்செறிந்த நிலனும், அந்நிலத்தின் ஓங்கிய ஆகாயமும்,

அவ்வாகாயத்தைத் தடவி வரும் காற்றும்; அக்காற்றின்கண்

தலைப்பட்ட தீயும்; அத் தீயோடு மாறுபட்ட நீருமென

ஐவகைப்பட்ட பெரிய பூதத்தினது தன்மை போல... விளக்கவுரை : சித்தாந்த கலாநிதி ஒளவை, சு. துரைசாமிப் பிள்ளை (மதுரைத் தியாகராயர் கல்லூரி).

எண்ணமெல்லாம் ஓரிடத்தையே நாடுதே கண்ணிரண்டும் ஓர்முகத்தையே தேடுதே. தேனேந்தும் மலராகி வானேந்தும் நிலவாகி சிந்தை கவர்ந்திடுதே - என் மணிவிழி மயங்கிடுதே.