பக்கம்:முன்னும் பின்னும்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 - முன்னும் பின்னும்

படம் : திருமணம், (1958) பாடலாசிரியர் : சுரதா, பாடல் : பாடியவர்: டி.எம். செளந்தரராஜன், இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு.

நீரின் றமையா துலகெனின் யார்யார்க்கும் வானின் றமையா தொழுக்கு. (திருக்குறள் 20) எத்தகையோரும் நீரில்லாமல் உயிர்வாழ முடியாது; நீரோ மழையில்லாவிடின் கிடையாது.

நீலவானம் இல்லாத ஊரே இல்லை

உலகினில் மழையின்றி வாழ்வே இல்லை.

அமுதே உனையன்றி வாழ்வே இல்லை

அன்பே இது உண்மையே. படம் : நாடோடி மன்னன் (1958), பாடலாசிரியர் : கவிஞர் சுரதா, பாடியவர் : டி.எம். செளந்தரராஜன், ஜிக்கி, இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு.

மலரினு மெல்லிது காமம் சிலரதன் செவ்வி தலைப் படுவார். (திருக்குறள் 1289) காம இன்பம் மலரினும் மெல்லியதாக இருக்கும்; ஒருசிலர் தாம் அதனுடைய சிறப்பை அடைவார்கள்.

அங்கும் இங்கும் விளையாடி அலைபோலே உறவாகி ஆனந்தம் காணும் நேரம்தானே உள்ளத்தின் ஆசையே உன்னைத் தேடுதே கொஞ்சிப்பேசும் கிளியே நல் இன்பம் தரும் ஜோதியே மானே மலரினும் மெல்லியது காதலே. படம் : நாடோடி மன்னன் (1958), பாடலாசிரியர் : கவிஞர் சுரதா, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், ஜிக்கி, இசை : எஸ்.எம். சுப்பையா நாயுடு .

மலைமிசைத்தோன்றும் மதியம்போல் யானைத் தலைமிசைக் கொண்ட குடையர் - நிலமிசைத் துஞ்சினா ரென்றெடுத்துத் தூற்றப்பட் டாரல்லால் எஞ்சினார் இவ்வுலகத் தில். பொழிப்புரை - மலையின்மேல் காணப்படுகின்ற பூரணச் சந்திரன் போல் யானையின்மேல் தமது தலையின்மேல் கவியப்பெற்ற