பக்கம்:முன்னும் பின்னும்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 107

வெண்கொற்றக் குடையாராகச் சென்றவர்களும் இறந்தனர்கள் என்று பூமியில் குறிக்கப்பட்டுப் பலரறியச் சொல்லப்பட்டாரல்லாமல் அச்சாவினின்றும் தப்பினவர் இந்த உலகத்தில் இலர் என்பது. நூல்: நாலடியார் 21; நாலடி நானூறு மூலமும் உரையும் : (1903), உரையாசிரியர் : மகாவித்வான் கோமளபுரம், இராசகோபாலப் பிள்ளை.

வருக வருக வேந்தே

வாகை மாலைதரும் மாமணம் வருகவே

மலைமீது தோன்றும் முழுநிலவு போலே - யானைத்

தலைமீது வெண்குடை பிடிக்கும் தலைவனே

வருக வருகவே. படம் : நாடோடி மன்னன் (1958), பாடலாசிரியர் : கவிஞர் சுரதா, பாடியவர்கள் : ஜிக்கி குழுவினர்.

வாட வெற்றிலை வதங்க வெற்றிலை

வாய்க்கு நல்லால்லை குருவி குடைந்த கொய்யாப்பழம்

கொடைக்கு நல்லால்லை நூல்: நாட்டுப்பாடல் திரட்டு 16, பகுதி : சிறுவர் உலகம் (வேடிக்கைப் பாட்டுக்கள்)

வாட வெத்திலே வதங்க வெத்திலே வாய்க்கு நல்லால்லே! - நீங்க நேத்து வச்ச சந்தனப் பொட்டு நெத்திக்கு நல்லால்லே! படம் தலை கொடுத்தான் தம்பி (1959) பாடலாசிரியர் : கவிஞர் சுரதா, பாடியவர்கள் : ஏ.எல். ராகவன், ஜமுனாராணி, இசை : விஸ்வநாதன் - ராமமூர்த்தி.

குழலும் யாழும் இனிமை தருமோ

மழலை இன்பம் போலவே படம் : பாக்கியவதி (1957), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர்: பி. லீலா, இசை : எஸ். தட்சிணாமூர்த்தி.

குழலும் யாழும் இனிமை தராது

குழந்தையின் தேன் மொழி

கேட்டிடும் போது.