பக்கம்:முன்னும் பின்னும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 முன்னும் பின்னும்

படம் : ஜெமினி ஒளவையார் (1953), பாடலாசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு, இசை : எம்.டி. பார்த்தசாரதி.

குடைநிழ லிருந்து குஞ்சர மூர்ந்தோர் நடைமெலிந் தோரூர் நண்ணினும் நண்ணுவர். (க-து) ஒரு காலத்தில் அரசர்க்கரசனாய் இருந்து யானைமேற் சென்றவரும், பின்னொரு காலத்தில் மிகுதியும் வருத்தப்பட்டுக் கால் நடையாக மற்றொரு தேசம் போகவும் நேரிடும். நூல் : வெற்றி வேற்கை, 51, நூலாசிரியர் : ஆதிவீரராம பாண்டியர், உரையாசிரியர் : வரகவி அ. சுப்பிரமணிய பாரதியார் (1958)

குஞ்சரத்தில் ஏறியே குடை நிழலில் ஆண்டபேர் வஞ்சகத்தின் வலிமையால் வண்டி ஒட்டினாலுமே அஞ்சி வாழ்ந்திடோம் யார்க்கும் அடிமை செய்யோம். படம் : வஞ்சிக்கோட்டை வாலிபன் (1958).

崇 - வேர்க்குங்கண் ணிததும்பும் கம்பிக்கும் மெய்ந்நடுங்கும் வார்த்தை நழுவும் மனம்பதறும் - கார்க்கதமாய்க் காந்தும் உரோமாஞ் சலியாகும் காதலித்தார்க்(கு) ஏய்ந்த குணங்காண் இவை.

உடற்கண் வேர்வை யரும்பும், கண்களில் ஆநந்த நீரொழுகும்,

உள்நடுங்கும், உடல் நடுங்கும், வசனம் குழறும், ஆசாரியரை என்றைக் கடைவோமென்று மனம் விரைந்து நாடும், மேகம் போல் உள்ளே குமுறி உளமெலாம் வெதும்பும், உடல் மயிர்க்கூச் செறியும். நூல் : ஒழுவிலொடுக்கம் (1865), நூலாசிரியர் : சீர்காழி கண்ணுடைய வள்ளல், பாடல் : 1.0 பகுதி சத்திநிப்ாதத்துத் தமரொழிவு, உரையாசிரியர்: திருப்போரூர் சிதம்பர சுவாமிகள். - மாலா அடிக்கடி நெஞ்சில் படபடப்பு

அளவுக்கு மீறின துடிதுடிப்பு

படுக்கையில் படுத்தா கதகதப்பு

இருகண் சிவப்பு - ஒரு மதமதப்பு

ஏன் ஸார் இத்தனை பரபரப்பு? மோகன் : இது காதல் நோயின் அறிகுறியாகும்

இவர் கவனிச்சு பார்த்தா சரியாகும்.