பக்கம்:முன்னும் பின்னும்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் 117

படம் : ஜெனோவா (1953), பாடலாசிரியர் : சுரதா, பாடியவர்கள் : ஏ.எம். ராஜா, பி.லீலா, இசை : ஞானமணி.

நீ தொடும் வேளையில் கொதிப்பும் என்ன? எந்தன் நிழலும் சுடுவதென்ன? படம் : இன்றுபோல் என்றும் வாழ்க (1977), பாடலாசிரியர் : நா. காமராசன், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : எம்.எஸ்.விஸ்வநாதன்.

கண்ணிலிருந்து இதயம் வரையில்

காதல் போராட்டம்

தரையிலிருந்து கட்டில் வரையில்

பருவத் தேரோட்டம் படம் : நேற்று இன்று நாளை (1974), பாடலாசிரியர் : சுரதா, பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : கே.வி. மகாதேவன்.

இதயத்திலிருந்து இதழ்கள் வரை - அது

ஏதோ ஒருவகை புதியகலை - மனப்

புயலுக்குப் பிறகு அமுதமழை - அதில்

மலர்போல் வளர்வது என்ன கதை? படம் : இன்று போல் என்றும் வாழ்க, (1977), பாடலாசிரியர் : நா. காமராசன், பாடியவர்கள் : டி.எம். செளந்தரராஜன், பி. சுசீலா, இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.

குடிக்கத் தண்ணில்லாது பெருங் கூட்டந் தவிக்குது - சிறு

கும்பல் மட்டும் ஆரஞ்சுப்பழ ஜூசு குடிக்கிது

அடுக்கு மாடிமீது சிலது படுத்துத் தூங்குது - பல

ஆயிரக் கணக்கான மக்கள் பாயில்லாமல் ஏங்குது, படம் : மணமகள் (1951), பாடலாசிரியர் : உடுமலை நாராயண கவி

எத்தனை மனிதர்கள் உலகத்திலே - அம்மா

எத்தனை உலகங்கள் இதயத்திலே ஏழையின் உறக்கங்கள் பாதையிலே - அந்த மாளிகை மயக்கங்கள் போதையிலே படம் : நீதிக்குத் தலைவணங்கு, பாடலாசிரியர் : நா. காமராசன்,

பாடியவர், ; பி. ஜெயசந்திரன், இசை : எம்.எஸ். விஸ்வநாதன்.