பக்கம்:முன்னும் பின்னும்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 முன்னும் பின்னும் -

சந்திர பிம்பமுக மலராலே - என்னைத்

தானே பார்க்கிறார் ஒருகாலே அந்த நாளில் தொந்தம் போலே வருகிறார்

இந்த நாளில் வந்து சேவை தருகிறார் (ஆரோ) நூல் : இராமநாடகம்

யாரோ என்ன பேரோ! யாதிவர் சொந்த ஊரோ? ஏனோ என் நெஞ்சம் இவரை நாடுது? முன்னம் கண்டதில்லை நேசம் கொண்டதில்லை இன்றோ இவர்மீது மனசு செல்லுது தோனுமிந்த நிலைதானோ காதல் என்பது - இதைச் சொல்லும்போதே எனது உள்ளம் இன்பங் கொள்ளுது. படம் : முதலாளி (1957), பாடலாசிரியர் : கவி. கா. மு. ஷெரீஃப், பாடியவர் : எம்.எஸ். ராஜேஸ்வரி, இசை : கே.வி. மகாதேவன்.

தமிழ்க்களஞ்சியம், நவசக்தி பத்திராதியர் திரு.வி. கலியாணசுந்தர முதலியார்

(கல்யாணம் செய்து வையுமே - என்ற மெட்டு)

பல்லவி திருவிகல்யாணசுந்தரன் - நல் திகழ்ந்திடும் யந்திரன் (திரு)

அநுபல்லவி பெருமை பெருகுந்தமிழ் பேசிடும் பண்டிதன் பேதகம் சிறிது மிலாததோர் கண்டிதன் அருமை தேசபக்தியில் அணுவும் தாண்டாதவன் அவனியில் தன்சுகம் நாளும் வேண்டாதவன் (திரு) தொழிலாளர் தனக்கென்றும் தொண்டுசெய்யும்

குணத்தோன் தீமையென் பதைச் சற்றும் செய்திடா அகத்தோன். வழிசுய ராஜ்யம் வழுத்திடும் மனத்தோன் வளம்பெரு திருச்சென்னை நகரில்வாழ் தனத்தோன் (திரு) நவசக்தி என்றஒரு பத்திரிகைக் கதியன் * நயம்பெறத் தமிழ்நிலை நாட்டிய நிதியன் நவம்பல செய்திடும் நாடோர் துதியன் நாடெங்கும் புகழ்நிலை பரவிடு மதியன் (திரு)