பக்கம்:முன்னும் பின்னும்.pdf/127

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 125

இன்னலோடு இருஜன்ம

தண்டனை ஏற்று நொந்தவர் வ.உ.சி.

என்ன கொடுமையாம் அந்தோ சிறையில்

செக்கிழுத்தவர் வ.உ.சி.

இறுதி நாளில் ஐயோ

அரிசி விற்றுப் பிழைத்தாராம் வ.உ.சி.

பாடலாசிரியர் : கவி கா.மு. ஷெரீப், படம் : மாதவி (1959), பாடியவர் : எஸ்.சி. கிருஷ்ணன், இசை : கே.வி. மகாதேவன்.

படம் :

படம் :

படம்

வரவுக்கேற்ற செலவு செய்து வாழ்க்கை நடத்தணும் - சொற்ப வருமானம் வந்தாலும் அதிலும் மிச்சப் படுத்தணும் . வீண் பெருமைக்காக ஆசைப்படுதல் பெரிய மடத்தனம் - புகை பிடிக்கும் பழக்கம் குடிக்கும் பழக்கம் விடுத்தவன் எவனோ அவன் நல்ல ஆண் மகன் - மிக நல்ல ஆண் மகன்.

மேனகா (1955), பாடலாசிரியர் : கே.டி. சந்தானம். சிக்கனமா வாழனும் சேர்த்து வைக்கப் பழகனும் பக்குவமா குடும்பந்தன்னை அண்ணன் மாரே பாதுகாக்கத் தெரியவேணும் அண்ணன் மாரே

சம்பளத்தை வாங்கிவீண் செலவு செய்யாதே!

தரித்திரத்தால் குடும்பந்தன்னைத் தவிக்க விடாதே! அம்பலத்தில் மேடை போட்டுப் பொய்யைச் சொல்லாதே! யாரையும் திட்டிப் பேசாதே! அதனால் லாபம் வராதே!

முதலாளி (1957), பாடலாசிரியர் : கவி. கா.மு. ஷெரீப்

,来“ ஆடவேணும் பாடவேணும் இன்பமாக - தினம் ஆணும் பெண்ணும் கூட வேண்டும் கும்பலாக பாடுபட்ட அலுப்புத் தீரும் ஆட்டம் ஆடினா - நல்ல பசியுங்கூட பறந்துபோகும் பாட்டுப் பாடினா.

பணம் பந்தியிலே (1961), பாடலாசிரியர் : கவி.கா.மு. ஷெரீப்