பக்கம்:முன்னும் பின்னும்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் 127

நூல் : ருக்மணி சத்தியபாமையின் மனதிற்கிசைந்த பாரிஜாத பு ஷ் பா பஹரண சரித்திரம் (1910), பக்கம் : 23, 24, நூலாசிரியர் : மதுரை மாநகரம் சுந்தர ஜெயவீர சூர தீர கவிராஜ கந்தசாமி பிள்ளை. இரண்டாம் பெண் :

மாம்பழத்தைப் போலிருக்கும் பூங்குழலி உன்னுடைய கன்னத்தில் காயமென்னடி - நீ அதன் காரணத்தைச் சொல்லுவாயடி - தலைவி : -

மாமலையோரம் மலர் கொய்யும் நேரம்

மதுவுண்டு கருவண்டு கடித்ததனாலே படம் : அன்னை மகள் அபிராமி (1959), பாடலாசிரியர் : கி ள வு ன் சுந்தரம், பாடியவர்கள் : ராணி ரத்னமாலா குழுவினர், இசை : வி. தட்சணாமூர்த்தி.

ருக்மணி : தரு

இன்பமுள்ள ப்ரானேஸா - வுன் இருவிழி சிவந்ததென்ன அன்புடனே யெந்தனுக்கு அறிவிப்பீ ரித்ததியே. கிருஷ்ணன் - தரு

நேற்றிரவு நித்திரையின்றி நேரிழையான் விழித்திருந்தேன் சாற்றும்புகழ் சரசியேநீ சந்தேகப் படலாகுமோ.

நூல் : ருக்மணி சத்திய பாமையின் மனதிற்கிசைந்த பாரி ஜாத புஷ்பாபஹரண சரித்திரம் (1910), பக்கம் : 24. நூலாசிரியர் : மதுரை மாநகரம் சுந்தர ஜெயவீர சூரதீர கவிராஜ கந்தசாமி பிள்ளை. முதல் பெண் :

மான் விழியும் மீன் விழியும் வேல் விழியும் தோற்றிடும் உன் கண் சிவந்து போனதென்னடி - நீ அதன் காரணத்தைச் சொல்லுவாயடி.