பக்கம்:முன்னும் பின்னும்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் 129

இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ஏகம்

சுட்டும் விழிச்சுடர்தான் - கண்ணம்மா! -

சூரிய சந்திரரோ?

வட்டக் கரிய விழி - கண்ணம்மா!

வானக் கருமை கொல்லோ?

நூல் : பாரதியார் பாடல்கள் (1922), பாடல் : 16, கண்ணன் பாட்டு, (கண்ணம்மா என் காதலி 1).

சுந்தர மோஹினியைக் கண்டது என் கண்கள்

சந்திர சூரியர் போலாம் தையல் இரு கண்கள்! படம் : ஆராய்ச்சி மணி, அல்லது மனுநீதிச் சோழன், (1942), பாடலாசிரியர் : கம்பதாசன், பாடியவர் : எஸ். பாலச்சந்திரன், இசை : பூரீனிவாசராவ் சிந்தே.

எண்ணெனப் படுவ தெண்ணுநற் கணிதம் எழுத்தெனப் படுவ திலக்கிய மிலக்கணம் எண்ணு மெழுத்துங் கண்ணென மொழிப. நூல் : மெய்யறம் (1930) மூன்றாம் பதிப்பு, நூலாசிரியர் வ.உ.சிதம்பரம் பிள்ளை, அதிகாரம் : 21. எண்ணெழுத்தறிதல், பக்கம்: 13, பாடல்கள் : 201, 202, 203. - - எண்ணும் எழுத்தும் இரு கண்ணாகும் ஏழைகள் வாழ்ந்திட இது தெய்வமாகும்.

படம் : வன சுந்தரி (1951), பாடலாசிரியர்: கம்பதாசன்.

来” வனஜ மலர்விழி வானுயிர் நாசி வைபவ நெற்றி நிலவினை யேசி பரிமள காந்தியும் கண்களைக் கூசி விளங்குமிப் பெண்ணை யடைவதே ராசி,

நூல் : சீதா கல்யாணம் நாடகம் (1915), பக்கம் : 68, நூலாசிரியர் டி. பக்தவத்ஸலம், பி.ஏ., எம்.பி.பி.எஸ்.,) எண்ணங்கள் தாரகை போல் எழிற்சுடர் வீசுதே என் நெற்றி தனில் இன்று நிலா வந்து பேசுதே

படம் : கண்கள் (1953), பாடலாசிரியர் : கம்பதாசன், பாடியவர் : எம்.எல். வசந்தகுமாரி, இசை : எஸ்.வி. வெங்கட்ராமன், ஜி. ராமநாதன்.

மு - 9