பக்கம்:முன்னும் பின்னும்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 - முன்னும் பின்னும் -

அன்னை மயமே அனைத்துயிரும் என்றிடலாம் அன்னப் பெருமைதனை யாருரைப்பார் - அன்னமதே ஆணுருவம் பெண்ணுருவம் ஆகிவிளையாடுமிதைக் காணுமதி யோருரைப்பார் காண். நூல் : அன்னதான விளக்கம் (1918), நூலாசிரியர் : தே.அ. சாமி குப்புசாமி.

பண்ணும் தானங்களில் பரமனைக் காண்பதற்கு அன்ன தானமொன்றே பெரிதாம் அன்புவழி யாகுமடி - ஞானப்பெண்ணே. படம் : மணிமேகலை (1959), பாடலாசிரியர் : கம்பதாசன், பாடியவர்: சீர்காழி கோவிந்தராஜன், இசை : ஜி. ராமனாதன்.

தானத்தில் முதலன்ன தானம் - இத் தரணியில் நிகர்.அதற் குண்டோ சமானம்

நூல் : ஆண்டார்குப்பம் பூரீ, பாலசுப்பிரமணிய சுவாமிகள், மீது ஆனந்தக் களிப்பு (1904), நூலாசிரியர் : மயிலை வி. சுந்தர முதலியார் பக்கம் : 123.

தீராத விளையாட்டுப் பிள்ளை - கண்ணன்

தெருவிலே பெண்களுக் கோயாத தொல்லை (தீராத) தின்னப் பழங்கொண்டு தருவான் - பாதி - தின்கின்ற போதிலே தட்டிப் பறிப்பான் என்னப்பன் என்னையன் என்றால் - அதனை

எச்சிற் படுத்திக் கடித்துக் கொடுப்பான் (தீராத)

நூல் : பாரதியார் பாடல்கள், கண்ணன் பாட்டு 9.

ராகம்: செஞ்சுருட்டி தாளம் : ஆதி

ஓயாத விளையாட்டுப் பிள்ளை - அவன் உருட்டுக்கும் உண்டோ எல்லை - அவன் - திருட்டுக்கும் உண்டோ எல்லை - (ஓயாத) மாயாவி கோள் சொல்லும் சோரன் வீண் கலகம் புரியும் வீரன் (ஓயாத) படம் வேணுகானம் (1941), பாடலாசிரியர் : கம்பதாசன், பாடியவர்: என்.சி. வசந்தகோகிலம், இசை : ஜி. கோவிந்தராஜுலு நாயுடு.