பக்கம்:முன்னும் பின்னும்.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

நூல்:

முன்னும் பின்னும்

2. பாஸ்கர தாஸ்

பச்சைவளை மிச்சம்பதி னாறுலட்சந் தானே - விலை

பகர்வேன் மச்சமானே - மகா உயர்வுளது தானே - இதைப் பார்க்கப்பசி தீருங்கரஞ் சேர்க்கவேசெந் தேனே, அணிவயிர மாயிரம்பொன் அன்னநடை மாதே -விலை

சொன்னது தப்பாதே - ஒளிர் மின்னலு மொப்பாதே - இதை அணிபவர்க்கே கலியாணம் ஆகிடுமிப் போதே. தங்கவளைக் கங்கணங்கள் நங்கையுனக் கினமாய் - நானே

தருவேன் நல்ல குணமாய் - நீயும் அணிவாய் மகிழ் மனமாய் - உன்றன் தவளநகை இதழுமிரு தனந்தருவாய் சுகமாய்.

பூரீமுருகன் திருவிளையாடல் என்னும் வளையற்சிந்து (1896),

நூலாசிரியர் : தஞ்சை கருத்தாட்டாங்குடி அஷ்டாவதானம் P.இராமசாமி பிள்ளை, பாடல் : 23. 24, 25

படம் :

வளையல் வாங்கலையோ அம்மம்மா வளையல் வாங்கலையோ --- ஒரு மாசில்லா சிந்து சுதேச வளையல் வச்சிரம் பதித்த உச்சித வளையல் மங்களம்சேர் தங்கவளையல் சிறு பைங்கொடியாள் பூணும் வளையல் பொன் (வளை) பலவித வளையல் மஞ்சநிறப் பஞ்சவர்ண வளையல் - இந்தப் பச்சை வளையல்பொன் லக்ஷம்விலைபெறும் பருவப் பெண்களின் மனதைக் கவரும் பார்த்துவிலை கேட்டு மகிழ்வீர்! கையில் கீர்த்திபெற சேர்த்து அணிவீர்!

வள்ளித் திருமணம் (1932), பாடலாசிரியர் : பாஸ்கரதாஸ்,

பாடியவர் : M.துரைசாமி.

சுந்தரஞ்சேர் தாமரையைச் சடைப்பாசி சூடிவந்தான்

அழகாய்த் தோன்றும்

சந்திரற்குக் களங்கமிகுந் திருந்துமதன் ஒளிகுறையாத்

தன்மை போல