பக்கம்:முன்னும் பின்னும்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 - முன்னும் பின்னும் -

படம் : பவளக்கொடி (1934), பாடல் : பாபநாசம் சிவன், பாடியவர் எஸ்.டி. சுப்புலட்சுமி.

வி.ஆர். கந்தசாமிப் பிள்ளை

தோட்டத்திலே பூப்பறிக்க

கூட்டமாக வாரும் பாட்டுப்பாடிப் பலமலரைக்

கூட்டிக் கூட்டிச் சேரும் மல்லிகையும் மருக்கொழுந்தும் வாசமான ரோஜா நல்ல நல்ல மருகுடனே

நலமாகப் பறிப்போம் கிண்ணம்போல வண்ணமாகக்

கிளையிலுள்ள பூவை கண்ணிகண்ணி யாகக்கட்டி

கழுத்திலேநாம் அணிவோம். அடுக்குமல்லி சாமந்தி -

அரளிஇவை எல்லாம் தொடுத்துடனே மாலையாகத்

தொங்கவிட்டுப் பார்ப்போம்.

நூல் : சிறுவர் பாடல் திரட்டு (1925), நூலாசிரியர் : தேவநேயப் பாவணர், பக்கம் : 10, 7-ஆம் பாடம்.

(கழுகுமலைக் குருவிக்குளம் என்ற வர்ண மெட்டு) வனமதனில் பூவெடுப்போம் ஏ தோழியே

வந்துபல மாலை செண்டு மனமகிழவே தொடுப்போம் ஏ தோழியே மணமுடனே கூந்தல் வைப்போம் மல்லிகையும் முல்லையதும் ஏ தோழியே

மணமுள்ள சண்பகமும் நல்ல இருவாட்சியதும் ஏ தோழியே

நாமெடுத்துச் சூடுவமே.

படம் : நளாயினி (1936), பாடல்: வி.ஆர். கந்தசாமி பிள்ளை, பாடியவர்: மிஸ். என்.எம். சுந்தராம்பாள்.