பக்கம்:முன்னும் பின்னும்.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் 145

மதுரை பாலசுந்தரக் கவி சம்பங்கி யெண்ணையிதோ - தடவினேன் சரசியென் ருக்மணியே சந்தன சீப்பினால் சிந்தைமகிழ்ந்திதோ சீவி சிக்கறுத்து சிமிழ்போற் கொண்டையிட்டு நாரதர் தந்தபுஷ்பம் - பாரிஜாத நன்மணம் வீசும்மலர் - தாரணியோர் புகழ் சரசி ருக்மணியுன் சீரிலகுங் கூந்தற் கின்பாய் மணம்வீச மலர் முடிக்கின்றேன் - மாதரசே மலர் முடிக்கின்றேன். நூல் : ப்ாரிஜாத புஷ்பாபஹரண சரித்திரம் (1910), நூலாசிரியர் : மதுரை மாநகரம் சுந்தர ஜெயவீர சூரதீர கவிராஜ கந்தசாமிப் பிள்ளை, பக்கம் : 25, 26. - - நொண்டிச் சிந்து

செண்பகாதித் தயிலந்தொட்டு சிகையைச் சிக்கெடுத்துப் பக்குவமாய் தக்கபடியே சீவிஜடை பின்னிய பின்னே - புஷ்பம் தேர்ந்தெடுத்து நான்தொடுத்து பாந்தமுடனே வாசமிகுந்த மலரை - அழகுபெற வைத்துடனே சூட்டிடுவேன் சித்தங்குளிர. படம் : சைரந்தரி (1939), பாடலாசிரியர் : மதுரை ரஞ்சித மோகனகவி, எம்.எஸ். பாலசுந்தரம் பிள்ளை, பாடியவர் : தென்னிந்தியா கோகிலகான பூரீமதி பி.எஸ். ரத்னாபாய். - -

- 崇 - பரமேஸ்வரி பராசக்தியே பாரத மாதா கண்பார்க் கலாகாதா கைராட்டை சுற்றி நாட்டில் வெற்றி நாட்டிடுவோமே புகழ் சாற்றிடுவோமே நம் பார்ட்டி ஒளவை நூற்ற நூலை

பார்த்திடுவீரே தேசப்பழமையின் சீரே பாரத சோதரிகாள் இனியாகிலும் ஆதரவே பெறுவோம் அடிமைத்தனம் நீங்கிடுவோம். படம் : சைரந்தரி (1939), பாடலாசிரியர் : எம்.எஸ். பாலசுந்தரம் பிள்ளை (மதுரை ரஞ்சித மோகனகவி), பாடியவர் : என். பாகீரதி.

மு -10