பக்கம்:முன்னும் பின்னும்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 - முன்னும் பின்னும்

மகள் :

ஆர்வ முடையநல் அம்மாவே, பொட்டுதனை

வேர்வை யழித்தாலும் மெல்லியல்என் குற்றமதோ? நூல் : மறுமலர்ச்சிக் கவிதைகள் (1946),பாடலின் தலைப்பு:காதற் குறி, நூலாசிரியர் : புதுவை ச. சிவப்பிரகாசம், பக்கம் : 37.

நெத்தி வேர்வை நனஞ்சு பொட்டு கொஞ்சம் அழியும் குங்குமத்து செவப்பு வெக்கம் போல வழியும்! படம் : பூவிலங்கு (1984), பாடலாசிரியர் : வைரமுத்து, பாடியவர் : ஜேசுதாஸ், இசையமைப்பாளர் : இளையராஜா.

வானத்தில் ஒரு கல் தொண்டையில் ஒரு கல் நிலத்தில் ஒரு கல், நீரில் ஒரு கல். வானத்தில் ஒரு கல் - கருக்கல் தொண்டையில் ஒரு கல் - விக்கல் நிலத்தில் ஒரு கல் - வழுக்கல் நீரில் ஒரு கல் - கலங்கல். நூல் : விடுகதைப் புதையல்(1951), பக்கம் : 32, தொகுப்பாசிரியர் : . தமிழ்ப்பண்டிதர் கே.ஜெ. வேதமுத்து.

வானத்திலே ஒரு கல் என்ன கல் பூமியிலே ஒரு கல் என்ன கல் அரிசியிலே ஒரு கல் என்ன கல்? வெத்திலையில ஒரு கல் என்ன கல்? அட வெவரங் கெட்ட ஆளு இப்ப வெடையைச் சொல்றேன் கேளு வானத்திலே ஒரு கல் - கருக்கல் பூமியிலே ஒரு கல் - வழுக்கல் அரிசியிலே ஒரு கல் - புழுங்கல் வெத்திலையிலே ஒரு கல் - அழுகல்

படம் : அச்சமில்லை அச்சமில்லை (1984), பாடியவர்கள் : மலேஷியா வாசுதேவன்,எஸ். ஜானகி இசையமைப்பாளர் : வி.எஸ். நரசிம்மன்.