பக்கம்:முன்னும் பின்னும்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

178 - முன்னும் பின்னும்

பாவ ராக தாளமுடன் தோன்றியதும் பரதக்கலையே.

படம் : கண்காட்சி(1971), பாடல்: பூவை செங்குட்டுவன்.

இராகம் : கமாஸ் தாளம் : ஆதி

காகந்தன்னைக் கறுப்பென்று சொல்லும் காலில்லா முடவனைக் கண்டிக்கச் செல்லும் ஆஸ்தான சந்தோஷிவந்து தோணினான். செத்தவன் பினமென்று திறமாயறிந்து சொல்லும் சீர்பெற்ற ஆஸ்தான சந்தோஷி வந்தான் பாவற்காய் கசப்பென்று பாரிலறிந்து சொல்லும் பார்புகழ் ஆஸ்தான சந்தோஷி வந்தான். நெல்லிலரிசியென்று நேராயறிந்து சொல்லும் நேர்பெற்ற ஆஸ்தான சந்தோஷி வந்தான்.

நூல் : ஜோதி நாடகம் (1874), நூலாசிரியர் : தண்டலம் தமிழ்

உபாத்தியாயர் சுப்பராய முதலியார், பக்கம் : 1.1,1.2.

சந்தேகம் இல்லை சந்தேகம் இல்லை

நமக்குச் சந்தேகம் இல்லை காக்கா கறுப்பு - சந்தேகம் இல்லை

கடல் தண்ணி உப்பு - சந்தேகம் இல்லே ஆண் பிள்ளைக்கு மீசை முளைக்கும் - சந்தேகம் இல்லை

அது கிடையாது பெண்பிள்ளைக்குச் சந்தேகம் இல்லை அப்பன் கூடே பிறந்தவன் அத்தை சந்தேகம் இல்லை

அவளுக்கேதான் மீசை முளைத்தால் சித்தப்பன் சந்தேகம்

இல்லை.

படம் : மனோகரா (1954), பாடல் : கே.ஆர். செல்லமுத்து.

姿 கலைஞர் கருணாநிதி

குடி உயரக் கோல் உயரும் கோல் உயரக் கொடி உயரும்

படம் : தூக்கு மேடை (1982), பாடல்: கலைஞர் மு. கருணாநிதி, பாடியவர் : மலேசியா வாசுதேவன், இசை : சங்கர் கணேஷ்.