பக்கம்:முன்னும் பின்னும்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 முன்னும் பின்னும்

காய்ந்தறியாப் புற்றரையும் கண்கவரும் சோலைகளும் பூந்தடமும் நல்வனப்பும் பூவையரும் - மாய்ந்தகன்ற பெண்ணலமும் செல்வாக்கும் பேறும் விளைமாண்பும் எண்ணுமலாய் நாட்டின் எழில். நூல் : ஈப்போ, தண்ணிர்மலை வடிவேலர் மும்மணிக் கோவை (1924), நூலாசிரியர் : யாழ்ப்பாணம் வண்ணைநகர் நெ. வெ. செல்லையா (ஈப்போ திருவள்ளுவர் கலாசாலைத் தலைமைத் தமிழ்ப் பண்டிதர்)

(பஃறொடை வெண்பா) ஆசை சிறிதுமில்லா தார்நிறைந்து வாழுமிந்த ஆசிரமந் தன்னை அடைந்த எனதுதோள் ஆஹா துடிக்கின்ற தாச்சரியம் ஆச்சரியம் ஆச்சரியம் இங்கே அதன்பலனெவ் வாறுவரும் ஆனாலு மென்ன அதிர்ஷ்டமெங் கெங்குமுண்டு ஆரே அறிவா ரதை. நூல் : சகுந்தலை அல்லது காணாமற் போன கணையாழி (1922), பக்கம் :

143, நூலாசிரியர் : திவான்பஹதூர் ச. பவனாந்தம் பிள்ளை 1.S.O. Fr H.S. (London) & M.R.A.S. (London)

மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன் வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும் துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள். நூல் : பாரதியார் பாடல்கள், பாடல் : 20, பகுதி : பல்வகைப் பாடல்கள் அழகுத் தெய்வம். -

துங்குமஞ் சனந்தானே சொகுசுடன் தாங்கிய மெத்தையே நானே தூஷண மாயுன்னை யேசிய துண்டோசொல். மெத்தையே? பாங்கான அரசர்கள் தூங்கவும் அழகான மெத்தையே - நானே படுத்தாலிண் டம்முள்போ லிடித்திட லாகுமோ மெத்தையே? நூல் : வானாவுர நாடகம், பக்கம் : 77.

崇 மதியே! தண்ணொளி மதியே! வானதி

காட்டும் வெள்ளையங் கமலமே! இளஞ்சிறார் வேட்டு நாடொறும் விளையாடு மாமிளர் குளிர்வெண் டிங்காள் குமுதக் கிழவா!