பக்கம்:முன்னும் பின்னும்.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

192

- முன்னும் பின்னும் -

தெள்ளமிர்த தாரையென மதுரங் கதித்தபைந்

தேன்மடை திறந்த தெனவே

செப்புமுத் தமிழினொடு நாற்கவிதை நாற்பொருள்

தெரிந்துரைசெய் திறமை யுடனே.

விள்ளிய காவியத் துட்பொருள் அலங்கார

விரிவிலக் கணவி கற்பம்

வேறுமுள தொன்னூல் வழக்கம்.உல கத்தியல்பு

மிக்கப்ர பந்த வண்மை உள்ளவெல் லாமறிந் தலையடங் குங்கடலை

ஒத்ததிக சபை கண்டபோ . தோங்கலை யொலிக்கின்ற கடல்போற்ப்ர சங்கமே

துரைப்பவன் கவிஞ னாகும். அள்ளிவிட முண்டகனி வாயனே நேயனே அமலனே அருமை மதவேள் அனுதினமும் மனதில்நினை தருசதுர கிரிவளர்

அறப்பளி சுரதேவனே. _

அம்பலவாணக் கவிராயர் அறப்பளிசுர சதகம் (75)

- 棗 மலரே மலரே மணக்காதே - என்னை

மாலையிட்டவர் வரும்வரைக்கும் நிலவே! நிலவே காயாதே - என்

நினைவு கொண்டவர் வரும் வரைக்கும்

நூல் : வெண்ணிலா (1961), பக்கம் : 27, தலைப்பு : மனமே பொறுத்திரு. நூலாசிரியர் : முத்துலிங்கம்.

நூல் :

முகிலாட்டம் கூந்தலடி கூந்தல் - ஒளி முத்தாட்டம் பற்களடி பற்கள் - இவள் துகிலாட்டம் வானமடி வானம் - தமிழ்ச் சொல்லாட்டம் இனிப்பதடி தேனும். வேலாட்டம் விழிகளடி விழிகள் - இரு வில்லாட்டம் புருவமடி புருவம் - அடி கோலாட்டம் ஒடிவதடி இடையும் - இவள் குரலாட்டம் ஊதுமடி குழலும்,

கனவுகள் (1966), நூலாசிரியர் : இரா. அரங்கநாதன், பாடல் : 8,

பக்கம் : 26.