பக்கம்:முன்னும் பின்னும்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

முன்னும் பின்னும்

நூல் : தனிப்பாடல் திரட்டு (1923),பாடல் : 69, பக்கம் : 49, ஆசிரியர் : காளமேகப் புலவர்.

வானுலக வீதியெலாம் தூள்பறக்கவே - வருகுது பொய்க் குதிரை யொன்று களிசிறக்கவே மாதமெலாம் ஒடுமொரு காதவழியே மற்றுமதை தொட்டவர்மேல் போடும் பழியே.

படம் : மாயா மச்சீந்திரா (1939), பாடலாசிரியர் : சி.ஏ.லட்சுமணதாஸ்.

ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பம் கூடி முயங்கப் பெறின்.

காமத்திற்கு இன்பம் தருவது ஊடுதலே ஆகும். அவ்வூடுதல் தீர்ந்தபின்

காதலனும் காதலியும் கூடித் தழுவப் பெற்றால் அஃது அக்காதலை

நிறைவேற்றும் இன்பம் ஆகும்.முயங்குதல் - கூடுதல். நூல் : திருக்குறள் (1330), உரையாசிரியர் : பேராசிரியர் மயிலை

சிவமுத்து.

விமலா : அவசரமேனோ?

செல்வம் : கனமொருயுகமே

விமலா மயில் வாகனம் ஓடிவிடாதே ? செல்வம் , தவப்பொழுது ஓடிவிடும் அன்பே செல்வம் : கூடலின் ஊடலினி தென்பதுண்மை

விமலா : பிரியேனென் றுறுதி தாரும் ஸ்வாமி படம் : என்மகன் (1945), பாடலாசிரியர் : C.A. லட்சுமணதாஸ், பாடியவர்கள் : U.R. ஜிவரெத்தினம், N. கிருஷ்ணமூர்த்தி. ராகம் : ஆனந்தபைரவி தாளம் - ஆதி

கூடலின் ஊடலினி தென்பதுண்மை பிரியேனேன் றுறுதி தாரும் ஸ்வாமி கண்ணே கனவிலும் உனையன்றி

யாரையும் கருதேன் கவலை வேண்டாம்

ப்டம்

என் மகன் (1945), பாடலாசிரியர்: சி.ஏ. லெட்சுமணதாஸ்

பாடியவர்கள் : என்.கிருஷ்ணமூர்த்தி, யூ.ஆர். ஜிவரெத்தினம்.

எந்த நிலத்தை எவன்பயிர் செய் கின்றானோ அந்த நிலமே அவனுடைய தாயிருக்க மந்தபுத்தி யாலே மதித்துப் பணம்வகித்தோர் தந்திரங்கள் கற்றுத் தவிக்கவிடும் பாதகரை