பக்கம்:முன்னும் பின்னும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 - முன்னும் பின்னும்

நாதசுரம் பொன்னுச்சாமி தவுல்மீனாட்சிசுந்தரம் கீதசுரம் கேட்குதடி கிருபாலினி கோஹர்ஜான் நாட்டியமும் நடக்குதடி!

படம் : அதிருப அமராவதி (1935), பாடலாசிரியர் : எஸ்.எஸ்.சங்கரலிங்கக்

கவிராயர்

இந்தியத் தாய்மக்கள் எல்லோர்க்குமே சேஷமம் தந்தாளும் ராட்டினமே - குதம்பாய் தந்தாளும் ராட்டினமே தமிழ்நாட் டபிவிருத்தி தனக்கே யவதரித்த சமுதாய ராட்டினமே - குதம்பாய் சமுதாய ராட்டினமே. சேதார மின்றிநம் செல்வத்தைக் காப்பாற்றும் ஆதாரம் ராட்டினமே குதம்பாய் ஆதாரம் ராட்டினமே.

நூல் : மாணவர் கீதமஞ்சரி (1926), பக்கம் : 42, நூலாசிரியர் : சங்கரலிங்கக் கவிராயர்.

தருமமதை விடவேறு சிலாக்கிய மில்லை

சாந்தமதை விடவுலகில் பக்தியில்லை குருவைவிட சீடனுக்கு தெய்வமில்லை

கோபமிலா மானிடர்க்குப் பாபமில்லை அருமறையை யுணர்ந்தவர்க்கு ஆபத்தில்லை

அழகிலா வேசியருக் காசையில்லை பெருமைதருங் கல்விதனிற் பெரிதுமில்லை

பேசவென்றார் பெண்கல்வி விசேடமாமே.

நூல் : மாணவர் கீதமஞ்சரி, பாடல் : 27, பக்கம் : 29, நூலாசிரியர் : சங்கரலிங்கக் கவிராயர்.

崇 வாலிப காலத்தைப் பாழாக்க லாகுமோ பாங்கியே சுந்த ராங்கியே பாரக்குஜ மிரண்டும் பூரித்தெழுந்து விம்மி

சிறுதே என்னை மீறுதே. சேயைப் போன்ற மதி தீயைப்போல வந்து காயுதே உடல் தீயுதே, செழுந் தேனும்பாலும் சீனிப் பாகுமே கசந்

திருக்குதே துன்பம் பெருக்குதே