பக்கம்:முன்னும் பின்னும்.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

முன்னும் பின்னும்

வள்ளுவர் தெள்ளுரை - பண்டித வித்துவான் ச. சாம்பசிவன், தமிழ் விரிவுரையாளர், செந்தமிழ்க் கல்லூரி, மதுரை.

எண்ணித் துணிக கரும மென்பார் - துணிந்தபின்

எண்ணுவ திழுக்கு நண்பா (எண்ணித்) வீணே - பெண்பாவம் வேண்டாம் பிடி வாதம் செய்யாதே - நீ, நீதியில் லாததில் (எண்ணித்)

படம் : லீலாவதி- சுலோசனா (1936), பாடலாசிரியர் : திண்டுக்கல் சுப்பையா பிள்ளை.

இரண்டு விஷயங்கள் பகுத்தறிவுக்கு முரணானவை. அவை, வருவாயை மிஞ்சிய செலவும், சாவு வருவதற்கு முன் தற்கொலை செய்து கொள்ளுதலுமாம்.

- மகான் ஷைகு சாகதி நூல் : மகான் ஷைகு சாசுதி, பக்கம் : 173, நூலாசிரியர் : ஆர்.பி.எம்.கணி. - பி.ஏ., பி.எல்., தற்கொலை பாபமே தானறியீரோ தாமுணர்ந்து அதனைத் தான்துணிவாரோ? அற்பர் செயலல்லவோ ஆகையால் நண்பா அன்புடன் என்சொல்லை ஆட்கொள்ளும் இன்பாய். படம் : லீலாவதி சுலோசனா (1936), பாடலாசிரியர் : திண்டுக்கல் சுப்பையா பிள்ளை.

மந்திரிக் கழகு வரு(ம்) பொருள் உரைத்தல். நூல் : வெற்றி வேற்கை (1931), பாடல் : 8, நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன் o ராகம் - ஷண்முகப்ரியா தாளம் - ருபகம்

அமைச்சரே நீர் அறைகுவீரே அறிவு மிகுந்து வரும்பொருளுரைசெயு மெனதிரு (அமை)

படம் : லீலாவதி சுலோசனா (1936), பாடலாசிரியர் : திண்டுக்கல் சுப்பையா பிள்ளை .

நானே தொட்டதுண்டு கண்மணியே - அத னாலே புண்ணானேன் மெய் மாமணியே

நற்குண மிகுந்த நளின வித்தார நயசரசி திக்குரவி மதிதிசை மாறினாலும் தினையளவும் பிரியேனடியிது சத்தியமே.