பக்கம்:முன்னும் பின்னும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 33

நூல் : ஸ்காந்த புராணம் கீர்த்தனை (1914), பாடல் : 36, பக்கம் : 257, பகுதி : யுத்த காண்டம் (தருமகோபன்வதம்),நூலர்சிரியர் : கவிகுஞ்சர பாரதி.

என்னை யாரென் றெண்ணினாய் - என் மீசையைப்பார் ஜாக்கிரதை புலிக்குப் பயந்த பயல்களெல்லாம் வந்தென் மேலே விழுங்கடா. படம் : அம்பிகாபதி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : என்.எஸ். கிருஷ்ணன் மற்றும் குழுவினர்

崇 ஜாதிமதப்பிரிவு தானேது ஞானிகட்குச் சமரசப் பெருந் தருமந் தெரிந்து தமர்வசப்படுங் கருமம் புரிந்து சத்தியத்திற் சித்தியடைவார் - தன்னையறியும் தத்துவத்தின் விர்த்தியிதேபார் - நூல் : காந்திமாலிகை (1923), நூலாசிரியர் : கம்பம் ஜனப் மி. பீர்முகம்மது சாகிப். -

崇 ராகம் - கமாஸ் தாளம் ஆதி

ஜாதிமத முயர்வு தாழ்வெனுந் தீது - - ஸ்மரஸ் ஞான மஹான்களுக் கேது ஆதிபரம்,பொருட்கு வேற்றுமை யேது அவனடியார்க்கும் அது கிடை யாது படம் : சிந்தாமணி அல்லது பில்வமங்கன் (1937), பாடலாசிரியர் பாபநாசம் சிவன், பாடியவர் : சிருகளத்துார் சாமா.

கையாத தீங்கனியோ? கயக்காத விழுதோ? கரையாத கற்கண்டோ? கறியாத கரும்போ? கொய்யாத நறுமலரோ? கோவாத மணியோ? குளியாத பெருமுத்தோ? குலையாத வொளியோ? மெய்யான பெருவாழ்வோ? விலையறியாப் பெண்ணோ? விடங்காத தீபிகையோ? விந்தைமர கதமோ? தீயாத வெண்சுடரோ? தியங்கலில் வாரிஜமோ? தெவிட்டாத செந்தேனோ? தேவர்புகழ் திருவோ?