பக்கம்:முன்னும் பின்னும்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - முன்னும் பின்னும்

நூல் : போஜ சரித்திரம் (1916), பக்கம் : 260, நூலாசிரியர் : சென்னை ஹைகோர்ட் வக்கீல் டி.எஸ். நாராயண சாஸ்திரியார்,பி.ஏ., பி.எல்.,

ராகம் :தோடி - விருத்தம்

மறையாத மின்னலிதோ - வரையாத ஓவியமோ குறையாத வெண்மதியோ - குவியாத பங்கஜமோ சிறையாத வெள்ளமிதோ- சுவையாத தெள்ளமுதோ மறையோன் படைத்ததுவோ - வழவோ எதன்கனவோ.

படம் : ரத்னாவளி(1935), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : மஹாராஜபுரம் கிருஷ்ணமூர்த்தி. -

தன்னையறிந் தின்பமுற வெண்ணிலாவே - ஒரு தந்திரநீ சொல்லவேண்டும் வெண்ணிலாவே நாதர்முடி மேலிருந்த வெண்ணிலாவே - அங்கே நானும்வர வேண்டுகின்றேன் வெண்ணிலாவே.

நூல் : திருவருட்பா இரண்டாவது திருமுறை, பக்கம் : 299, தலைப்பு : வெண்ணிலா, பாடல் : 1,2, நூலாசிரியர் : இராமலிங்க அடிகள் ராகம் - குந்தளவராளி தாளம் - மிச்ரசாப்பு

சஞ்சலந்தீர்ந் தின்பமுற வெண்புறாவே - ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்புறாவே நாதனங்கை வீற்றிருந்த வெண்புறாவே-அந்த நாதன்வர வேண்டுகின்றேன் வெண்புறாவே.

படம் : நவீன சாரங்கதரா (1936), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : எம்.கே. தியாகராஜ பாகவதர்.

姿

பச்சைமா மலைபோல் மேனி

பவளவாய் கமலச் செங்கண் அச்சுதா அமரர் ஏறே

ஆயர்தம் கொழுந்தே என்னும் இச்சுவை தவிர யான்போய்

இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்

அரங்கமா நகரு ளானே. - ஆழ்வார்