பக்கம்:முன்னும் பின்னும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 - முன்னும் பின்னும்

வலதுகண் துடிக்குது வலதுதோள் துடிக்குது சாமியே - என்று பலவித மாகவே பல்லிகள் சொல்லிச்சென் மாமியே.

நூல் : வானவுர நாடகம் (1890), பக்கம் : 350,நூலாசிரியர் : ரவிவாடி

கம்மவார் குலோத்துங்க அப்பண நாயக்கர்

எந்தனிடது தோளும் கண்ணும் துடிப்பதென்ன? இன்பம் வருவதென்று சொல் சொல் சொல் கிளியே!

படம் : சகுந்தலை (1940), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன் பாடியவர் : எம்.எஸ். சுப்புலட்சுமி

சொல்லுவதென்னடி மெல்லியேகேள் - வெகு

துரமென்னுரதுகாசி தான் - என்றன்

பேரும் பிராமண சந்நியாசி தான் - இந்த எல்லையில் யாத்தில்ர நல்லதீர்த்தமாடி இங்குவந்தேனடி பெண்ணே

நூல் : சித்திரங்கதை விலாசம் (1877) ஆனி மாதம்,பக் : 48, நூலாசிரியர் :

பரசுராமக் கவிராயர், குண்டையார் தண்டலம்.

இராகம் - குறிஞ்சி தாளம் - ஆதி

நானோர் பரதேசி - கால்கள் நடக்க முடியவில்லை ஊர்காசி ஏனோ எனையேசிப் பழிப்பார் யாவருமே பலபல பேசி.

படம் : திருநீலகண்டர் (1939), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர் : சிறுகளத்தூர் சாமா

அணியக் கூடாதா? கதர் அணியக்கூடாதா? - நல்ல புத்தி வல்லையா? உங்கள் சித்தம் கல்லையோ!

ஆதியிலே நம்பெரியோர் அணிந்துவந்த தெந்தத்துணி? தீதிலாத கதரென்னும் திவ்யஆடை அன்றோ?அன்றோ? நாகரீக காலமென்று நாணயமாய் வாய்பேசுமீர் நாகரீக காலமேகி நானூறு வருஷமாச்சே!

நம்முடைய பெரியோர்கள் நுண்ணிதான எலிமயிரால் செம்மையான கம்பளங்கள் சொகுசுடனே நெய்துவந்தார். நல்லதொரு மோதிரத்துள் நயமான முழத்துணியைச் செல்லும்வகை யன்றியேதான் நம்பெரியோர் அடைத்துவைத்தார். சிறுகக்கட்டிப் பெருகவாழு,என்றுமல்லோ ஒளவை சொன்னாள் பெருகக்கட்டி மல்லுடுத்திப் பேதைகளாய்த் திரியலாமா?