பக்கம்:முன்னும் பின்னும்.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 45

மாதே - என்னை மானம் போக

ஈனமாய் வையாதே.

படம் : பாமா விஜயம் (1934), பாடலாசிரியர் : கே.வி. சந்தானகிருஷ்ண நாயுடு, இசை : சென்னை ரங்கசாமி நாயகர் குழுவினர்.

மனைவி : கொல்லைக் காட்டு நரியைப் போல

பல்லைக் காட்டி வீண் வீச்சு வெல்லக்கட்டி போல பேச்சுஒரு சேலை வுண்டா

என்னாச்சு? புருஷன் : சேலை ரெண்டு வாங்கித் தாரேன் செடைக்கொச்சு வாங்கித்தாரேன் காலையும் புடிச்சுடறேன் கோவிச்சுக்க வேணாந்தாயி

படம் : தாயுமானவர் (1938), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர்கள் : பி.ஜி. வெங்கடேசன், பி.எஸ். ஞானம், இசை : ஜி. பாஞ்சல நரசிம்ம ராவ்.

யார் போய்ச் சொல்லுவார் யார் போய்ச் சொல்லுவார் - இதுவேளை எனை வேண்டி அரசனுக்கு யார் போய்ச் சொல்லுவார். மாமுனி தனக்கென்று வழங்கிய கடனுக்குக் காமினி மாதையும் விற்றான் மயான முற்றான் - என்று யார் போய்ச் சொல்லுவார்

படம் : ஹரிச்சந்திரா (1935), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்.

தொண்டரைத் தூற்றாதே! கண்டவிலை மாதரைக் கண்கொண்டு பாராதே கல்லாத மூடர்பால் கலந்துநீ சேராதே தொண்டர்களைக் குறித்துத் தூவித்துப் பேசாதே சொல்லுறுதி யுண்டானால் துன்பங்கள் வாராதே. படம் : சிந்தாமணி (1937)

எல்லா வுயிரும் உன்றன் மக்கள்தானே இங்கிவர்க்குள் ஏனோ தாழ்வுமுயர்வும் பிறவியிலுண்டோ ஸ்ன்னிதானம் தன்னிலுமுன் அடியவர்களை எளியவரென்று இழிவு செய்வதும் முறையோ தேவ தேவா.