பக்கம்:முன்னும் பின்னும்.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 51

களிமயி லாட்டம் புள்ளிமான் கூட்டம் காதுக்கினிய உந்தன் பாட்டும் கலந்த இன்பக் (குளிர்) படம் : பவளக்கொடி சரித்திரம் (1934), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

உலக வாழ்வு சதமா? - இதற் குடலை விலைக்கு விற்று ஜீவனஞ் செய்யலாமா? படம் : சிந்தாமணி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன்

பல்லவி மாய ப்ரபஞ்சத்தில் ஆனந்தம் வேறில்லை வஞ்சமில்லாத மெய்க் காதலலா தில்லை,

படம் : சிந்தாமணி (1937), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், பாடியவர்கள் : எம்.கே. தியாகராஜ பாகவதர், கே. அஸ்வத்தம்மா

என்ன கோரம்? இறைவனுறையும் புனிதக் கோயிலிலே - இது

என்ன கோரம்? வன்னவுடை ஆபரணம் மின்னவே மயக்கும் - குல மாதர்விலை மாதரைப் பகுத்தறியக் கூடவில்லை

என்ன கோரம்? கூச்சமில்லை! அர்ச்சனைக்கும் கூலியோ? சாந்த மெங்கே? கொள்ளையோ? எச்சிலுமிழச் சந்தையோ? சிவசிவ

என்ன கோரம்? படம் : தாயுமானவர் (1938), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், எம்.எம். தண்டபாணி தேசிகர், எம்.எஸ். தேவசேனா நடித்தது.

来 நட்ட கல்லைத் தெய்வ மென்பார் - கெட்டிக்காரர் பொய்யடா சுட்ட கல்லைப் பேச்சி யெனில்

சுவர்களின் பேர் என்னடா? வேண்டியதைச் சாமி தந்தால்

வேலை செய்ய வேணுமோடா தூண்டி யின்றி மீன் கிளம்பி

தொண்டைக்குள்ளே தோணுமோடா? படம் : பக்த சேதா (1940), பாடலாசிரியர் : பாபநாசம் சிவன், (பாபநாசம் சிவன், ஜி. சுப்புலட்சுமி நடித்தது)