பக்கம்:முன்னும் பின்னும்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நூல்

முன்னும் பின்னும் - 55

பக்திரலை கீர்த்தனங்கள் (1922), பாடல் : 57, பக்கம் : 65, 66

நூலாசிரியர் : உடுமலை முத்துசாமிக் கவிராயர்

படம் :

நூல்

வாசத் தென்றல் வீசுதே, பூங்காவனக்கிளி பேசுதே விலாச மலர்த்தடாகமே - வெண்தாமரை வியூகமே கூசாதே மங்கைபோல் வெண்முல்லை முத்துநகை கொள்ளுதிங்கே கோகிலம் பண்பாட வண்டெலாம் சுருதிசெய்ய தோகை மயில் ஆடல் விந்தை மாசூர பாடல் விருக்ஷங்கள் துவிடு மலர்க்குலம் கண்கவருதே மானோடு சிங்காரமான பகூஜிஜாலம் யாவும் தேனான காதலின்பம் தேடும் காசவி புகல்வதோ!

பாலாமணி (1937), பாடலாசிரியர் : பாரதிதாசன்.

மனமே பணமெனு மகிமையிலாது

மாநில மீதினில் வாழ்வது தீது

தினமே யிதனனு பவமறியாது

செலவுசெய் தால்ஜனப் பெருமை தராது.

மாணவர் கீதமஞ்சரி (1926), பாடல் : 21, பக்கம் : 23, நூலாசிரியர் :

சங்கரலிங்கக் கவிராயர்.

படம் :

பணமே உனதொரு மகிமையே மகிமை பாரினில் கோரிய காரியம் நடைபெறும் பணமே உனையே படையாதவர்க்கேது பகர்தரு மதிப்பே கிடையாது.

பாலாமணி அல்லது பக்காத் திருடன் (1937), பாடலாசிரியர் :

பாரதிதாசன்.

நூல் :

崇 சாதகங்களும் பொய்யே சகுனங்களும் பொய்யே சற்றேனு மெய்யாமோ - மகளே மருமகளே - நமது சோதிடத்திற்றானே சொல்லுநன் னிமித்தங்கள் சுத்தப் பொய்களல்லோ - மகளே மருமகளே

பிரம்ஹ சமாஜ நாடகம் (1871), பக்கம் : 128, நூலாசிரியர் :

சைதாபுரம் காசி விசுவநாத முதலியார்,

நாமிருவர் சம்மதித்தால் எந்த நாய்தான் நம்மைத் தடுக்கும் சாமிக்கும் வேலை இல்லை சடங்குகள் காசைப் பிடுங்கிடவும் முடியாது