பக்கம்:முன்னும் பின்னும்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 - முன்னும் பின்னும்

தொடர்பை வெளிப்படுத்துவதும் அரிய செயல். இது ஆர்வத்தின் வெள்ளோட்டம்; ஒப்பு நோக்கும் ஒப்பற்ற பணி.

காலந்தோறும் சிந்தனையாளர்கள் தத்தம் வாய்ப்புகளுக்கேற்ற சூழ்நிலையில் வெளிப்படுத்துகின்ற எண்ணத் துளிர்களை, கருத்து மலர்களைத் தேடித் தொகுத்துப் பார்க்கையில் மொழியின் கருத்து வளர்ச்சி விரிவாய்த் தோற்றமளிக்கிறது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தோன்றி வாழ்ந்த எழுத்தாளர் பலரை நாம் அறிகின்றோம். அவர்கள் வாழ்ந்த காலத்தின் சிந்தனை வளத்தை அறிகின்றோம். கலைகள் வளர அவர்கள் அளித்த கருத்து வளம் தெரிகின்றது. -

கவிதைகள், நாடகங்கள், பலதுறை நூல்கள் தோன்றியுள்ளன. அவற்றின் தொடர்ச்சியாகவும் காலவளர்ச்சிக் கேற்பவும் எழுத்தாளர் தம் படைப்புகள் மலர்ந்துள்ளதை நிரல்படத் தொகுத்தளிக்கும் கடுமையான பெரும்பணியில் ஈடுபட்ட கவிஞரின் ஆய்வுத் தொண்டு மொழி வளர்ச்சிக்குதவும் முதிர்ந்த பணியாகும்.

இந்நூலின் பயன்கள் பலப்பலவாகும். எழுத்தாளர்களையும் அவர்களின் நூல்களையும் தெரிந்து கொள்கிறோம். தமிழ்திரையுலகில் தொடக்கத்திலிருந்து வந்திருக்கிற படங்களைத் தெரிந்துகொள்கிறோம்.

பாடலாசிரியர்கள் பலரைப்பற்றிப் படித்தறிகிறோம். இசை அமைப்பாளர்களையும், பாடல்களைப் பாடியோரையும் தெரிந்து கொள்கிறோம். நூறாண்டுகளுக்கு மேற்பட்ட கால அளவில் எழுத்து நடைப் பாங்கு, மொழியை ஆளும் முறைமை, சொல் வழக்கு முதலியவற்றின் அவ்வக் காலப் பதிவுகளை உள்ளவாறே பார்த்து அறியலாம், மொழியை வளர்க்கும் சிந்தனையாளர்களும், படைப்பாளர்களும் மக்களிடம் கலையுலக வழியில் கருத்துகளைப் பரப்பி வந்துள்ள வரலாற்றை அறிகிறோம். இலக்கிய வரலாற்றுக்குரிய இப்பகுதியைக் கருத்தோடு கண்டளித்த கவிஞருக்குத் தமிழுலகில் நிலையான இடம் உண்டு.

சொல்லுருவம் பெற்ற கருத்துகள் நூல்களாகவும் இசைப் பாடல்களாகவும் திரையுலகம் வழியாக வளர்ந்து செம்மொழிக்குச் சிறப்பு சேர்க்கும் வரலாற்றைத் தரும் வாய்ப்பைப் பெற்றமைக்கு மகிழ்கின்றோம். - .

வரலாற்றுணர்வுடைய கவிஞர் சுரதா அவர்களின் எண்பத்து நான்காம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் (23.11.2004 செவ்வாய்க் கிழமை) அவரது அயரா உழைப்பின் அறுவடையாக இந்நூலைப் பதிப்பித்து வெளியிடுவதில் பெருமை அடைகிறோம்.

அறிவுலக முன்னோடிகளை நினைவு கொள்ளும் நாளே அரிய நாளாம்! வளர்க அறிவுலகம்! அன்பன்,

வெள்ளையாம்பட்டு சுந்தரம்