பக்கம்:முன்னும் பின்னும்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

முன்னும் பின்னும்

சிறந்த பாடல்களாகும். இவர் 1943அம் ஆண்டு மேத் திங்களில்

காலமானார்.

மாயவர் தியாகராஜ தேசிகரின் பாடல் :

நாட்டைக் குறிஞ்சி என்பார் - நாங்கள் வாழும் நாட்டைக் குறிஞ்சி என்பார் நாட்டுப் பெருமைதனைக் கேட்டுப் புவியுள்ளவர் நாட்டமோடு தங்கள் நாட்டுக்காகப் - பொதி

மாட்டிலேற்றிச் செல்லும் (நாட்டை)

(வள்ளித்திருமணம் காலவேடிபம்)

டி.வி. சாமி இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று திருக்குறள் (100) ராகம் - சங்கராபரணம் தாளம் - மிச்ரம்

தனியிளம் பருவத்தைத்தானே கழிக்கலாமோ கனியிருப்பக் காயைத்தின்று ஒழிக்கலாமோ?

படம் : மைனர் ராஜாமணி (1937), பாடலாசிரியர் : டி.வி. சாமி

பின்னலைப் பின்னின் றிழுப்பான் - தலை

பின்னே திரும்புமுன் னேசென்று மறைவான் வன்னப் புதுச்சேலை தனிலே - புழுதி

வாரிச் சொரிந்தே வருத்திக் குலைப்பான் நூல் : பாரதியார் கவிதைகள், பகுதி : கண்ணன் - என் விளையாட்டுப் பிள்ளை, பாடல் : 4, பக்கம் : 253 ராகம் - இந்துஸ்தான் காபி தாளம் - ஆதி

விளையாடிட வீதியில் போவான் விளையாடிடும் பெண்களைப் பிடிப்பான் விளையாட்டெனப் பின்னலை யிழுப்பான் விரைவாக முன்னோடி யொளிப்பான் படம் : பாக்ய லீலா (1938), பாடலாசிரியர் : டி.வி. சாமி, பாடியவர் : பேபி ருக்மணி, இசையமைப்பாளர் : எ.சி. விஸ்வாஸ்.

崇 கும்மியடியுங்கள் கும்மியடியுங்கள் கொஞ்சும் கிளிமொழிக் கோதையர்காள்!