பக்கம்:முன்னும் பின்னும்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

நூல் :

முன்னும் பின்னும் -

ஏழையாய்ப் பெண்களடிமைத் தனத்தில் இருக்கும் வரையிலும் இத்தலத்தில் கேழைத்தனம் விலகாதிவ் வசனத்தில் கொஞ்சமும் சந்தேக மில்லையென்று - தயை மிஞ்சப் பெரியோர் சமூகம் சென்று (கும்மி)

ஹிந்துஸ்தான் ஹரிபஜனைக் கீர்த்தனை (1914), பாடல் : 82,

பக்கம் : 68; நூலாசிரியர் : கும்பகோணம் என்.வீராசாமி.

ராகம் - செஞ்சுருட்டி தாளம் - ஆதி

படம் :

சுதந்திரமே யினியே துயரேது

பூதல மீதினில் சகலரும் இன்று

பேதமில் லாமலே வாழ்வது நன்று

மாதருக் கென்றும் சுதந்திர மீந்து

மேன்மையாய் காதலில் வாழ்ந்திடில் இன்று

பாக்ய லீலா (1938) (சுதந்), பாடலாசிரியர் : டி.வி.சாமி,

பாடியவர் : பி.எஸ். சீனிவாசராவ், பி.ஏ., இசை : எ.சி. விஸ்வாஸ்.

நூல்

ஒற்றுமையின் உன்னதம் இந்தியர்கள் ஒன்றாய் இணைய நினையுங்கால் சொந்தகுலத் தோர்களையும் தூரத் தொலைத்தலென்ன! பாஷையி னற்சண்டை பட்டத்திற் காச்சண்டை ரோஷத்தி னாற்சண்டை யோசித்தால் தீங்கலவோ?

உட்சண்டை மாற்றி உயர்நெறியை மேவுதற்குக்

கட்புலனும் உட்புலனும் கைதருவ தெந்நாளோ! எல்லோரும் ஒன்றாகி ஏக மனதுடனே சொல்லால் செயலால் துணைபுரிமின் புத்திரர்காள்!

விஸ்வதர்மோபதேச வீரகண்டாமணி, பகுதி : ஒற்றுமையின்

உன்னதம், பக்கம் : 46, 47, நூலாசிரியர் : பி. கல்யாண சுந்தராசாரி.

படம் :

ஒத்துமைதான் வேணுமையா - ஆமாமோ உறுதி ரொம்ப வேணுமையா - ஆமாமோ பாரத மக்களுக்குள்ளே - ஆமாமோ பலவித வித்யாசம் ஏனோ - ஆமாமோ

காரியம் ஜெயிக்க ஒரே - கட்டுப்பாடு வேணுமையா (ஒத்துமை) லக்கி ஸ்டார் (அல்லது), பாக்யதாரா (1940). வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்து வீற்றிருப்பாள் - வெள்ளை