பக்கம்:முன்னும் பின்னும்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 61

அரியா சனத்தில் அரசரோ டென்னைச்

சரியா சனத்துவைத்த தாய். நூல் : விநோதரசமஞ்சரி, பகுதி : காளமேகப்புலவர் சரித்திரம், பக்கம் : 334, நூலாசிரியர் : அட்டாவதானம் வீராசாமி செட்டியார், பாடியவர் : கவி காளமேகம்.

இராகம் - சாமா தாளம் - ஆதி மானஸ் பூஜிதையே அம்மையென் (மானஸ்) வான குஞ்சரி வனஜகு மாரி ஞான ஸம்ஸாரி நம்பினேன் ஆதரி (மானஸ்)

அரியாச னத்தமரும் அரசரோ டெந்தனைச்

சரியாச - னத்தில்வைத்துத் தரமெலாந் தந்தனை (மானஸ்) படம் : கம்பர் (1938), பாடலாசியர் : டி.கே.சுந்தர வாத்தியார், பாடியவர் : எஸ்.வி. சுப்பையா பாகவதர்.

நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்

நீரிற் சுருட்டு நெடுந்திரைகள் - நீரில்

எழுத்தாகும் யாக்கை; நமரங்காள்! என்னே?

வழுத்தாத தெம்பிரான் மன்னு. நூல்: நீதிநெறி விளக்கம், பாடல் : 1. நூலாசிரியர் : குமரகுருபர சுவாமிகள்.

நீர்க்குமிழி இளமை நீர்மேல் எழுத்து வாழ்க்கை

பார்த்துண்மை வுணராரோ - மனிதர்

பரமன்தாள் பணியாரோ? படம் : பாண்டுரங்கன் (1939), பாடலாசிரியர் :டி.கே.சுந்தர வாத்தியார், பாடியவர் : வித்வான் கே.ஏ. ரீனிவாசன். -

崇 தொட்டாலும் கைமணக்கும் சொன்னாலும் வாய்மணக்கும்

துய்ய சேற்றில் நட்டாலும் தமிழ்ப்பயிராய் விளைந்திடுமே பாட்டினுறு

நளினந் தானே.

நூல் : தனிப்பாடல் திரட்டு, பாடல் : 65, பக்கம் : 417 பாடலாசிரியர்: பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்.

இருக்கட்டும் எப்படியும் கண்ணிவச்சுப் பிடிச்சுடுவேன். அவளைத் தொட்டாலும் கைசிலிர்க்கும் சொன்னாலும் வாய் இனிக்கும் எட்டியெட்டிப் பார்த்தமுண்ணா எட்டாமப் போயிடுமோ?