பக்கம்:முன்னும் பின்னும்.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - முன்னும் பின்னும்

படம் : தமிழறியும் பெருமாள் (1942), பாடலாசிரியர் : உடுமலை

நாராயணகவி, பாடியவர் : வி.ஏ. செல்லப்பா.

கல்வியைப் போலொரு - செல்வமுண்டோ கதிபெற - வழிதரும் - புகழுறும் பிரபல (கல்வி) பல்லுயிர்க் கெல்லாம் பயன்படத் தூண்டும் பகைவரை வெல்லும் பழமையைச் சொல்லும் (கல்வி)

டம் : கலாவதி (1951), பாடலாசிரியர் : டி.கே. சுந்தர வாத்தியார்.

இராகம் - சஹானா தாளம் - ரூபகம் புத்தி இது மகளே - உனக்குநற் - புத்தி இது மகளே (புத்தி) மாதா பிதாக்களை மகிழ்ந்துநீ தாங்கு மண்ணில் நல்லபிள்ளை யென்றுபேர் வாங்கு தீதுகள் உனக்குச் செய்தோர்க்குமே தீங்கு செய்யாம லிருப்பது திருவுளப் பாங்கு (புத்தி) உயிர்ப்போனாலும் நீ ஒருபொய் சொல்லாதே உன்வீடு கடந்தயல் வீடு செல்லாதே பயில்மறு புருஷர்கள் பார்க்க நில்லாதே பாவத்தைக் கனவிலும் நினைத்தல் பொல்லாதே (புத்தி)

மாமி நாத்திகளை மதித்துற வாடு மகளுந்தாயும் போலே மகிழ்ந்துநீ கூடு சாமியாகுங் கணவன் தயவைநீ தேடு தலையணை மந்திரம் ஓதுதல் கேடு. விடியுமுன் எழுந்துநீ வேலையை நாடு வீட்டைக்கண்ணாடிபோல் விளக்கிக் கையாடு உடலும் ஆடையும் அழுக்கொழிய நீராடு உடல் பெருக்கத் தீனி உண்பதுகேடு (புத்தி) நூல் : சர்வ சமய சமரசக் கீர்த்தனைகள் (1878), நூலாசிரியர் : மாயூரம் மாஜிமுன்சீப், ச. வேதநாயகம் பிள்ளை, பக்கம் : 195, 196, கீர்த்தனை : 178, பகுதி : தகப்பன் மகளுக்குப் புத்தி கூறல்.

புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே, தங்கச்சி கண்ணே - சில புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே, தங்கச்சி முன்னே புத்திமதிகள் சொல்லுறேன் கேளு முன்னே. மாமனாரை மாமியாளை மதிக்கணும் - உன்னை மாலையிட்ட கணவனையே துதிக்கணும்