பக்கம்:முன்னும் பின்னும்.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67

முன்னும் பின்னும்

ஆருயிர் யாவும் ஒருயிரான 'கோகிலம் கொஞ்சும் சோபித மாலை! - படம் : மாயா மாயவன் (1938), பாடலாசிரியர் : வேலுசாமி கவி.

இப்படத்தில் கதாநாயகியாக நடித்தவரின் பெயர் கே. கோகிலா என்பதாகும்.

பொன்போலும் தாமரைப் பூவுமே கொளுத்துது மின்போலுஞ் சந்திரன் மேலெலாங் காயுது என்மேலுஞ் சந்தனம் எளிவந்தம் செய்யுது தன்மேலும் பூக்கொண்ட பள்ளியும் வருத்துது. நூல் : சீதா கல்யாண நாடகம் (1915), பக்கம் : 74. நூலாசிரியர் : டி.பக்தவத்சலம், பி.ஏ., எம்.பி.பி.ஐ.

சந்தனம் கஸ்தூரி ஜவ்வாது மணக்குது சல்லாப மாகமனம் கொண்டாட பிணக்குது பந்தெனும் கைக்கலச செண்டுகள் கணக்குது பால்நில வொளிஎந்தன் மேனியைத் தகிக்குது. படம் - சதி - மகாநந்தா (1940), பாடலாசிரியர் - எஸ். விேல்சாமி கவி பாடியவர் - டி.ஆர். சுப்புலட்சுமி. இசையமைப்பாளர் : டி.எம். இப்ராகிம் மற்றும் குழுவினர். பாரிஸ் மெட்டு தாளம் - ரூபகம்

வாலிப காலத்தில் மஞ்சத்தின் மேலென்னை ஆலிங்கனம் செய்தால் ஆனந்தம் நூல் : சகுந்தலா சரித்திரம் (1930). பக்கம் : 35. பகுதி : சகுந்தலை விரகதாபம். நூலாசிரியர் : வித்வரத்தினம். எம்.ஆர்.எஸ். வேல்சாமி கவிராயர். - -

(மாம்பழக் கவிச்சிங்க நாவலர் அவர்களின் மரபினர்)

வாலிப காலம் வருமோ இனிமேல்

மாரன் ஏவும் பாணம் சகியேன்

மருவிட வருவாயே

மலரணை - தனிலணைந்திடுவாயே

கனிரச : இதழமுதருள் வாயே! படம் : சதி - மகாநந்தா (1940), பாடலாசிரியர் : வேல்சாமி கவி, இசையமைப்பாளர் : டி.எம். இப்ராகீம்.