பக்கம்:முன்னும் பின்னும்.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - முன்னும் பின்னும்

நேற்று வருவீரென்று நான் காத்திருந்தேன் வாசலிலே வேற்றுமை நினைத்தால் மனதாற்றுவேனோ பூசலிலே

படம் : குலேபகாவலி (1935), பாடலசிரியர் : டி.வி.நடராஜ ஆச்சாரி, பாடியவர் : டி.பி.ராஜலட்சுமி

கன்னலன்றி வேம்புநுகர் காமத் துரோகிகள்போற் பிள்ளையொரு தெய்வத்தைப் பேசோமே - எந்நாளும் சாற்றுவதுங் காமகலை சாதிப்ப துங்கரணம் போற்றுவதும் காமனடிப் போது.

பொருள் : இல்வாழ்க்கையில் மதுரமான கரும்பு போன்ற மடந்தையருடைய ஆலிங்கன முதலியவைகளா லுண்டாகும் இன்பத்தைவிட்டுக் கைப்பான வேம்பு போன்ற துறவறத்திற் றவஞ் செய்யப் புகுந்து வருந்துகின்ற காமத்துரோகிகள் போல நாம் மற்றொரு தெய்வத்தைத் துதி செய்யோம். எந்நாளும் நாம் படிப்பதும் மடந்தையரிடத்துக் கலவியிலே, துதிப்பதும் மன்மதனுடைய பாதகமலமே என்றவாறு. நூல் : கொக்கோகம்,நூலாசிரியர் : அதிவீரராம பாண்டியன், பாயிரம் பாடல் : 1. நூதனவுரை : கொற்றமங்கலம் இராமசாமிப் பிள்ளை.

மன்மதனே தெய்வமென்று என்மனந்த னிலேயிந்த

மாதருக் கரசி வுண்மை நாட்டினாள் - எப் போதுமேயி லாத மையல் மூட்டினாள் - அந்த

மங்கையோடு கலந்து போக சுகம்பெறாமல் வருந்தி னாலினி -

மாநிலத்தில் வாழ்க்கையும்பா ழாகுமே - உயிர் தானிலைத் திராதகன்று போகுமே.

படம் : லலிதாங்கி (1935), பாடலாசிரியர் : டி.வி.நடராஜ ஆச்சாரி, பாடியவர் :வி.ஏ.செல்லப்பா.

முருகு சந்தனக் குழம்பு பூசுவார் விரகத்தீயை

மூட்டி மூட்டி விசிறி வீசுவார் கருகு தேயுட லுருகு தேயென்பார் விரித்தபூவுங்

கரியு தேமுத்தம் பொரியு தேயென்பார். அருகி லிருந்து கதைகள் நடத்துவார் எடுத்து மாதர்

அனைத்து வாழைக் குருத்திற் கிடத்துவார் பெருகு நன்னகர்க் குறும்ப லாவினார் வசந்த மோகினி

பெருநி லாவி னொடுக லாவினாள்.