பக்கம்:முன்னும் பின்னும்.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 79

முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள் ளோரும்

முடிவிலொரு

பிடிசாம்ப ராய்வெந்து மண்ணாவ துங்கண்டு

பின்னுமிந்தப்

படிசார்ந்த வாழ்வை நினைப்பதல் லாற்பொன்

6tsis) Lj606) is -

அடிசார்ந்து நாமுய்ய வேண்டுமென் றேயறி

வாரில்லையே!

நூல் : பட்டினத்தார் பாடல்கள், பகுதி : திருத்தில்லை, பக்கம் : 97.

அகம்பாவம் கொண்டே அகிலத்தை வென்றே அரசாள நினைத்தோரெல்லாம் - முன்னே அரசாள நினைத்தோரெல்லாம் முடிவாக ஒர்நாள் தடுமாறி வீழ்ந்தே பிடி சாம்பல் ஆனாரடா - ஒரு பிடி சாம்பல் ஆனாரடா அறிவாயடா - உண்மை - தெரிவாயடா அகங்காரம்

கூடாதடா (அகம்பாவம்) படம் : சதி அனுசூயா, பாடல் : கு.சா. கிருஷ்ணமூர்த்தி, பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன், இசை : டி.எம். இப்ராஹீம்.

崇 வாழப்பிறந்த மக்கள் கூட்டம்

வறுமைத் தீயில் வாடுது - உடல் வளையாத சுக போகியை

வாழ்த்தியே துதி பாடுது - இந்தப் பாழான நிலையைப் பார்க்கப்

பார்க்க மனசு கொதிக்குது - இது ஊழ்வினை யென்று சொல்லி

ஊரை ஏய்க்கப் பார்க்குது.

豪 உழைத்திடும் தொழிலாளிக் குணவில்லையே உழவனுக்கோ சொந்த நிலமில்லையே - இன்னும் அழுது புலம்பும் மனிதவர்க்கம் இங்கே ஆனந்தம் காணும் நந்நாளும் என்றோ? படம் : அவன் அமரன் (1958), பாடலாசிரியர் : கு.சா. கிருஷ்ண்மூர்த்தி, பாடியவர் : கே.ஆர். ராமசாமி, இசையமைப்பாளர் டி.எம். இப்ராஹீம்.