பக்கம்:முன்னும் பின்னும்.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 7

நூல் : திருக்குற்றாலக் குறவஞ்சி, நூலாசிரியர் : மேலகரம் திரிகூடராசப்பக்கவிராயர், பகுதி : வசந்த வல்லியைப் பாங்கிகள் உபசரித்தல், பக்கம் : 20, கண்ணிகள் : 1, 2

தோழிகள் : காம்பரிந்த மல்லிகை சேர்

பூம்படுக்கையை விரித்தோம் அம்மா சீமந்தனி : காந்துதடி தேகமெல்லாம்

சோர்ந்ததடி நீரிருப்பீர் சும்மா தோழிகள் : வெட்டிவேர் விசிறிகொண்டு

வெப்பந்தீர வீசுவோமே மாதே சீமந்தனி : மேளம் கீர்த்தி காற்றுவந்து

மேவினால் அசையுமோ ஆகாதே தோழிகள் : பாவையுன் மேனி குளிராகவும்

பன்னீர் தெளித்தோம் மாதே. சீமந்தினி : பன்னி வெந்நீர் ஆச்சுதடி

என்நிலைமை மாறிட லானேனே. படம் : சீமந்தனி (1936), பாடலாசிரியர் : டி.வி.நடராஜாசாரியார், பாடியவர்கள் : டி.பி.ராஜலட்சுமி, M.D.ராஜம், பார்வதி,பட்டு, ருக்மணி 崇

நன்மதி கதிரோ னென்றும்

நடக்கின்ற திசையை விட்டு தென்வடல் சென்றிட் டாலும்

திங்களின் குலத்தில் வந்தோன் சொன்மொழி யிரண்டா மென்று

சொற்பனத் திலுமெண் ணாதே உன்மன திஷ்டம் போல

உதவுவே னுரைசெய் வாயே.

நூல் : ஏகாதசி மகத்துவம் என்னும் உருக்குமாங்கதன் நாடகம் (1935), பக்கம் : 74, நூலாசிரியர் : விருதுநகர் A.கந்தசாமிக் கவிராயர்

மாதர்கள் திலக மேவான்

மதிரவி மாறி னாலும்

வாதெவர் புரிந்திட் டாலும்

வல்வினை தடுத்திட் டாலும்