பக்கம்:முன்னும் பின்னும்.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் - 89

மாசற்ற நின்முகத்தை மதியொத்த தென்றி.டிலோ ஆசற்ற குறைதலில்லா வம்முகத்துக் கழகாமோ? தீதற்ற நின்முகத்தைத் தாமரையென் றோதிடிலோ போதென்று குவியாவுன் பொன்முகத்துக் கழகாமோ? கார்போலு நின்கூந்தல் கருமேக மென்றி.டிலோ நீர்தோயா மணங்கமழு நின்கூந்தற் கழகாமோ? வரிநிறைந்த நின்கண்கள் வனப்புடைய கயலென்றால் பரிவுற் றவற்குப் பழுதொன்றும் வாராதோ? செவ்வாயைக் குமதமெனச் செப்பிடுவ துண்டானால் அவ்வாயைப் போலதற்க தரமின்மை யறியாரோ? கண்ணாடி யெனக்கவிகள் கன்னத்தைச் செப்பிடிலோ கண்ணாடி பார்த்தார்க்குக் களிப்பூட்டின தறியாரோ? நூல் : சுரதற்கலிவெண்பா (1921), நூலாசிரியர் : ம.தி. திருமறைக்குன்றம், பக்கம் : 8, அடிகள் : 38, 39, 40, 41, 42, 43.

வாரி முடித்த குழல் எனக்கேதான் சொந்தமென்று வானத்துக் கார் முகிலும் சொல்லுதே மலர்ந்து விளங்கும் முகம் எங்களின் இனமென்று வண்ண மலரெல்லாமே துள்ளுதே. தந்தப்பல் எழில்கண்டு தன் இனந்தான் என்று பொங்கும் கடலின் முத்து பண்பாடுதே குங்கும இதழ்கண்டு கோவைக் கனி எல்லாம் தங்களின் இனமென்று ஆடுதே. படம் : சபாஷ் மாப்பிளே (1961), பாடலாசிரியர் : மருதகாசி, பாடியவர்கள் : சீர்காழி கோவிந்தராஜ்ன், பி. சுசீலா, இசை கே.வி. மகாதேவன்.

இராகம் : எங்குல காம்போதி தாளம் : ரூபக சாபு

வருஷம் பிறக்கும் வகையேது சொல்லுவாய் தோழா - பூமி

வட்டமாய்ச் சூர்ய்னைச் சுற்றுங் காலமது கேளாய் நூல் : இசைத்தமிழ் மஞ்சரி (1934),பக்கம் : 23. நூலாசிரியர் : 'போயட் லாரெட் பண்டித ஆர். உலகநாதபிள்ளை (மாட்சிமைமிக்க புதுக்கோட்டை மகாராஜா அவர்களின் தமிழாசிரியர்), பாடல் : 19. பெண் :

தன்னைத்தானே சுற்றிக்கொண்டு இந்த உலகமே

செங்கதிரோனைச் சுற்றும் சேதி பழைய பாடமே.