பக்கம்:முன்னும் பின்னும்.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

முன்னும் பின்னும் -

விற்பொலி புருவம் கோட்டி

விளைந்துநெட் டிலைமுக் காட்டின் கற்புடை மடவார் நாணம்

காட்டுவ கதிர்ச்செஞ் சாலி. நூல் : திருக்குற்றாலத்தல புராணம் (1874), பாடல் : 12, நூலாசிரியர் : மேலகரம் திரிகூடராசப்பக் கவிராயர்.

நெத்தி வேர்வை சிந்தினோமே முத்து முத்தாக - அது நெல்மணியாய் விளைஞ்சிருக்கு கொத்துக் கொத்தாக. வளர்ந்துவிட்ட பருவப் பெண்போல் உனக்கு வெட்கமா? - தலை வளைந்து சும்மா பாக்கிறியே தரையின் பக்கமா?

படம் : பிள்ளைக் கனியமுது (1958), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர்கள் : டி.எம். சொந்தரராஜன், இசை : கே.வி. மகாதேவன்.

பஞ்சணை மீது பெண்டு;

பானைபோ ஜனத்தி லன்னை, அஞ்சிலாச் சுகத்தில் தோழி;

அரும்பிணி யுற்றால் தெய்வம்; கொஞ்சலில் கிள்ளை, நீதி

கூறலில் அமைச்சன் போலும் வஞ்சியை மனைவி யென்றே

வாழ்த்துவர் மேலோர் தாமே.

நூல் : பிரதாப சந்திர விலாசம் (1877), பக்கம் : 158, நூலாசிரியர் : ப.வ.இராமசாமிராஜு,பி.ஏ., பாரிஸ்டர், அட்-லா, எப்.ஆர்.எச்.எஸ். (லண்டன்) எம்.ஆர்.ஏ.எஸ். (லண்டன் 1915)

துணையாக இருப்பதிலே தோழனைப்போல -யுக்தி சொல்வதிலே மதியுள்ள மந்திரிபோலே உணவூட்டி வளர்ப்பதிலே அன்னையைப்போலே - பதிக்கு உண்மையாகத் தொண்டுசெய்து பூமியின் மேலே வாழனும் - பெண்கள் வாழனும். படம் : பெரிய கோயில் (1958), பாடலாசிரியர் : மருதகாசி, பாடியவர்: டி.வி. ரத்தினம், இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன்.

சைனா ஜப்பான் ரெங்கோன் பர்மா சல்லா சில்க்கு காரியே மைனா பிடிக்காதடி மானாட்டம் போடாதடி மதிக்கும் ஜகோ செண்டு சோப்பு மாறிப் போச்சு கிராப்பு சீப்பு