பக்கம்:முன்னும் பின்னும்.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 - முன்னும் பின்னும்

சிற்பிகள் செய்யாத சிலையொன்று கண்டேன் சிங்கார வாய் திறந்து பேசவுங் கண்டேன்.

படம் : சாரங்கதரா (1958), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : பி. பானுமதி, இசையமைப்பாளர் : ஜி. ராமனாதன்.

இராகம் : தன்யாசி - தாளம் : ரூபகம்

குழலையே போன்ற மழலையே பேசி குளிரவே செய்யும் குழந்தைகள் வாசி பாச்சி சோச்சியென்று கேட்டதும் இல்லாது பரதவிக்கும் குறை ஹாஹா பொல்லாது.

நூல்: சீதா கல்யாண நாடகம் (1915), பாடல் : 19, பக்கம் : 26.

நூலாசிரியர் : டி. பக்தவத்ஸலம், பி.ஏ., எம்.பி.பி.ஐ.,

மாடிமனை கோடிப்பணம் வாகனம் வீண்ஜம்பம் வாழ்வினிலே ஒருவனுக்கு வருவதல்ல இன்பம்! மழலைமொழி வாயமுதம் வழங்கும்பிள்ளைச் செல்வம் - உன் மார்மீது உதைப்பதிலே கிடைப்பதுதான் இன்பம்!

படம் : மனமுள்ள மறுதாரம் (1958), பாடலாசிரியர் : அ. மருதகாசி,

பாடியவர் : சீர்காழி கோவிந்தராஜன், இசை : கே.வி. மகாதேவன்.

ராகம் : நாதநாமக்கிரியை தாளம் : ரூபகம்

உன்னையே நீயெண்ணிப்பாரு - இந்த உலகத்தில் எதுசொந்தம் யோசித்துக்கூறு பின்னை வளர்த்திடும் பாசம் இடை பிங்களை சுவாஸம் தடைப்பட்டால் மோசம்.

படம் : கிருஷ்ணபக்தி அல்லது பக்த ஜயதேவர் (1937).

உன்னையே நீ எண்ணிப்பார் - உன்னை உணராமல் வாழ்வதால் பலன் என்ன கூறு மன்னாதி மன்னர் எல்லோரும் - இந்த மண்ணோட மண்ணாகிப்போன தல்லாது - இங்கு எந்நாளும் வாழ்ந்ததும் இல்லை - இதை எண்ணாமல் அலைவதால் விளைவது தொல்லை. படம் : பக்த மார்க்கண்டேயா (1957), பாடலாசிரியர் : அ. மருதகாசி, பாடியவர் : சிவராமன், இசை : எம்.எஸ்.விஸ்வநாதன், டி.ஆர். ராமமூர்த்தி.