பக்கம்:முன்னும் பின்னும்.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னும் பின்னும் 97

மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார் எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார் - செவ்வி அருமையும் பாரார் அவமதிப்புங் கொள்ளார் கருமமே கண்ணாயி னார்.

நூல்: நீதிநெறி விளக்கம் (1927), பாடல் : 53, பக்கம் : 15, நூலாசிரியர் : குமரகுருபர சுவாமிகள்.

உன் வேலையிலே நீ கண்ணாயிரு உன்னாலே இவ்வுலகம் முன்னேறுது உன் எல்லைதனை நீ காணும்வரை எங்கும் நில்லாமல் செல்வாய் நீயே. படம் - மல்லிகா (1957), பாடலாசிரியர் - அ. மருதகாசி, பாடியவர்கள் - ஜிக்கி மற்றும் நாகேஸ்வர ராவ், இசை - டி.ஆர். பாப்பா.

நெற்றி வேர்வை நிலத்தினில் இற்றுவிழ வேலைபாரு - சற்று நேரங்கூட வீணாய்ச் சுற்றாதே பணத்தைச் சேரு.

நூல் : பெற்றான் சாம்பனார் சரித்திரக் கீர்த்தனம் (1915), பக்கம் : 1.24, நூலாசிரியர் : ரஞ்சித மோகனகவி மாயவரம் தியாகராஜ தேசிகர்.

பொழைக்கும் வழியைப் பாரு! ஒழைச்சாதான் சோறு: பொழுதை வீணாக்கி சோம்பேறிப் பேரு எடுத்துத் திரியாதே! காசு பணம் சேரு.

படம் : ஆசை அண்ணா அருமைத் தம்பி (1955), பாடலாசிரியர் : அ.மருதகாசி, பாடியவர்கள் : கே.வி. மகாதேவன், தோடி கண்ணன், எஸ்.ஸி. கிருஷ்ணன், குமாரி சுசிலா, குமாரி உடுதா, குமாரி பத்மா இசை : கே.வி. மகாதேவன்.

。崇

இராகம் : செஞ்சுருட்டி தாளம் : ரூபகம்

கொண்டல் நிகர். கூந்தலின் கட்டு குலைந்து மலர். உலர்ந்த தேனோ கூறவேணும் நேரில் வாய்விட்டு - அருள் கொஞ்சுமஞ்சுக வஞ்சியேவிழி பஞ்சடைந்து சிவந்து புன்னகைக் கோவையிதழ் கோரமேற்பட்டு வெண்மையதான உண்மையைக் காண கோரினேன்சந் தேகமேலிட்டு - - (கொண்)