பக்கம்:முன் பனிக் காலம்.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்பனிக் காலம் 3. பலருக்குத் தூய வெள்ளிய மஸ்லின் அல்லது ஜியார் ஜட்டு போன்று பனி மாசு படிந்திருக்கிறது என்று கூறுவது விளங்கும். அக்காலத்திலோ பனி தவழ்வது போல வெள்ளை ஆடை அசைந்தது என்றால் நன்றாக விளங்கும். அதனாலே, பனி தவழ்பவை போல் நுண் டுகில் நுடங்க’ என்று உருத்திரங்கண்ணனார் என் லும் பழம்புலவர் பெரும்பாணாற்றுப்படையிற் பாடி னார். வணிகர் குலத்து மகளிர் சிலர் மயிலைப் போல இயலிச் சிலம்புகள் ஒலிக்கும்படி மாடத்தின்மீது நூற் பந்தாடுகின்ற செய்தியைத் தெரிவிக்கின்ற இடத் திலே அவர் இங்ங்னஞ் செப்பினார். அம்மகளிர் பசிய மணிகள் கோத்த வடங்களைத் தரித்த இடையினை உடையர். அவ் இடைகளில் மெல்லிய ஆடையை அவர் கள் உடுத்து உள்ளனர். பந்தாடும்பொழுது அவ் ஆடை அசைவது பனி தவழ்வதுபோல உள்ளது என் அம், அவர்களுடைய அரைகள் கொன்றை மரத்தின் கொம்பு போல் உள்ளன என்றும், அப்புலவர் கரு தினார். அதனால், - 'கூழுடை கல்லிற் கொடும்பூண் மகளிர் கொன்றை மென்சினைப் பணிதவழ் பவைபோற். பைங்காழ் அரையில் துண்டுகில், நுடங்க” என்று கூறினார். - - முன்பனிக் காலத்தில் கருவிளையும் கரும்பும் பூக் கின்றன. பிடவும் பகன்றையும் பிணிவிடுகின்றன. தோன்றியும் கோடலும் பூத்துத் தோன்றுகின்றன. பயறும் உழுந்தும் பழுத்துக் காயைச் சிந்துகின்றன. அவரை முகையவிழ்கின்றன. இவற்றை எல்லாம் பழந்தமிழ்ப் புலவர் கண்டறிந்து தத்தம் பாடல்களில்