பக்கம்:முன் பனிக் காலம்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 நாடகத் தமிழ் பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கட் பிஞ்ஞை யொடு ஆடிய குரவை ஆடுதும் பாம் என்றாள் கறவை கன்று துயர் நீங்குக எனவே.” கூத்தாடுவதற்கு வேண்டிய அரங்கங்களும், அவைக் களங்களும் அக்காலத்தில் அழகுபெற அமைக்கப்பட் டிருந்தன. ஊரின் நடுவில் தேரோடும் வீதிகளின் எதிர்முகமாக அரங்கம் அமைக்கப்படும். அரங்கம் ஏழு.கோல் அகலமும் எட்டுக்கோல் நீளமும் உடைய ஆந்த விளக்கு, நிறுத்தி ன்விக்கப்படும். ஆடுகின்ற இடத்தைத்தான் அரங்கம் என்று சொல்வது. இருந்து பார்க்கும் இடத்தை அவை என்பது. இதனை,

நூனெறி மரபின்.அரங்கம் அளக்கும். கோலளவு இருபத்து கால்விரல்.ஆக, எழுகோல் அகலத்து எண்கோல் நீளத்து ஒருகோல் உயரத்து உறுப்பினதாகி உத்தரப் பலகையொடு அரங்கின் பலகை வைத்த இடைநிலம் நாற்கோல் ஆக எற்ற வாயில் இரண்டுடன் பொலியத் தோற்றிய அரங்கில் தொழுதனர் ஏத்த” என்ற சிலப்பதிகார அடிகளால் அறியலாம்.