பக்கம்:முன் பனிக் காலம்.pdf/104

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காடகத் தமிழ் 97. திருவள்ளுவர் செல்வத்தின் நிலையாமைக்கு உவமையாக, கூத்தாடும் அவைக்களத்துள்ள கூட்டம் கலைந்து போதலைக் குறிப்பிட்டுள்ளார். ஒருவர், சிலர், பலராக அவைக்களத்தில் நாடகங் கான மக்கள் வந்து , அமர்கின்றனர். நாடகம் முடிந்ததும் எல்லாரும் சென்றுவிடுகிறார்கள். அதுபோல ஒன்று, சில, பலவாகக் காசு சேர்கிறது. சில வேளைகளில் அடியோடு ஒழிந்து போகிறது என்று சொல்ல நினைத்த அவர், 'கத்தாட்டு அவைக்குழரத்து அற்றே பெருஞ்செல்வம், போக்கும் அதுவிளிந்து ஆற்று” என்று கூறினார். இதனாலும், சிலப்பதிகாரப் பகுதி பாலும் இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னால் தமிழ் நாட்டில் ஆடும் அரங்கமும், அவைக்களமும் இருந்தன என்பது பெறப்படும். தமிழ்நாட்டு ஊர்களில் ஆங்காங்கே நாடக சாலை கள் பல அக்காலத்தில் இருந்தன. உதாரணமாக, காவிரிபுகும் பட்டினத்தில் நாடகம் பார்ப்பது பொது மக்களுடைய இயல்பாகக் கூறப்பட்டுள்ளது. :ெ வர்களும், தொண்டுசெய்து பிழைத்தவர்களும் தத்தம் வாழ்க்கையை இன்பமாக நடத்த அறிந்திருத்தின்ே என்று கூறலாம். அவர்கள் பாடலைக் கேட்டும் நாடகத்தை விரும்பிப் பார்த்தும், வெள்ளிய நிலா வின் பயனைத் துய்த்தும் உறங்கினார்கள் என்று சொல்லப்பட்டுள்ளார்கள். பட்டினப்ப்ாலையென்னும் பழந்தமிழ்ப் ப்ாட்டில் இக்ெ சய்தியைக் காணலாம். மு. கா.-7