பக்கம்:முன் பனிக் காலம்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 9இ. என்ற பெரும்பாணாற்றுப்படைப் பகுதியைப் பார்க்க. இங்கனம், இதனை உதாரணமாகக் கூறுவது என்றால், மக்கட்கு இக்காட்சி எளிதில் தெரிந்த தாகவே இருத்தல் வேண்டும். அக்காலத்தில், கூத்தாடுவோரை ஆதரித்தோர் பலர். உதாரணமாக, ஓரி என்னும் பெரிய வள்ளல் தன் நாட்டினைக் கூத்தாடுவோர்க்குக் கொடுத்தான் என்பது அறியப்படுகிறது. தனது நாட்டினையே நாடகம் ஆடுவோர்க்கு அவன் நயந்தளித்தான் எனின், அவனுக்கு நாடகக் கலையினிடத்து உள்ள பெறும்ற்றுப் புலனாகாதோ? இது, சிறுபாணாற்றும் படையில், - -> நளிசினை நறும்போதுகளுலிம்காகுமுதிர் நாகத்துக் குறும்பொறை நன்னாடு கோடியிர்க்கு ஈந்த காரிக்குதிரை காரியொடு மலைந்த இரிக்குதிரை ஒரி”. என்ற இடத்துச் செல்லப்பது, கோடியர் என் ப்ேர் உம்ன்பீiண்ள்த்து ஆடுவோர் ஆகிய் கூத்தர் ←ᎢᏮaᎢéᎦ . கூத்தருள், ஆடவருக்குப் பொற்றாமரையும், பெண்டிருக்கு நல்ல அணிகலன்களையும் விரும்பி அளிக்கும் இயல்பினனாக நன்னன் என்னும் ஓர் அரசன் உரைக்கப்பட்டுள்ளான். நெடிய தேர்களை பும், பெரிய யானைகளையும், விரையும் புரவிகளையும் பெரு நிதியங்களையும் கூத்தாடுத் தொழிலோர்க்குக் கொடுக்கும் இயல்பினனாக, மலைபடுகடாம்” என்ற பழம்புத்தக்த்திலே அவன் சிறப்பிக்கப்பட்டுள்ளான்.