பக்கம்:முன் பனிக் காலம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

j CO நாடகத் தமிழ் அவனைப் போன்று நாடகக் கலை வல்லோரை நயந் தளித்தோர் பலர் அக்காலத்தில் திகழ்ந்தனர். அதனால் நாடகக் கலை அக்காலத்திற் பெருமையுற் நிருந்தது. 2 நாடக மேடையிலோ, சினிமாத் திரையிலோ நடிகராக வேண்டுமானால், அவிநயம் நன்கு அறிதல் வேண்டும். அவிநயம் என்றவுடனே அறிஞர் சிலர் அவிநயக் கூத்தை நினைப்பது இயல்பு. அவிநயம் என்ற சொல் சாந்திக் கூத்தின் நான்கு வகைகளுள் ஒன்றாகிய அவிநய்க் கூத்தைக் குறிக்கும். என்பது உண்மையே. அந்த அவிநயம், கதை ஒன்றும் தழு வாமல், பாட்டின் பொருளுக்கேற்றவாறு கையைக் காட்டி நடிப்பதாகும். - அவ் அவிநயத்தைக் குறித்தின்று சண்டுப் பேசு வது. மற்று, மனக்கருத்தைக் குறிப்பால் விளக்கும் உறுப்பின் ச்ெய்ன்க்களைப்பற்றியதாகவே அவி நiம் என்னும் செர்ல் இங்கே ஆளப்படுகிறது. நாட் கத்தில் நடிக்கின்றவர்களும் சினிமாவில் நடிப்பவர் களும் அவிநயத்தில் தேர்ச்சி பெற்றவராயிருந்தால் தான், நாடகமும் சினிமாவும் நன்றாகச் சிறப்புறும். ஆதலால், அவிநயத்ன்த்க் குறித்து ஒரு பழைய அருந் தமிழ்ப் பனுவல் யாது கூறுகின்றது என்பது இக் கட்டுரையிற் காட்டப்படும். அதிற் சொல்லப்படும் செய்திகள் பழமை வாய்ந்தன. ஆயினும், மக்கட்பண்பு இன்னும் மாறாது அவ்வாறே இருத்தலால், அதனிற் கூறப்படுகின்ற விதத்தில் அவ்வவ் அவிநயத்தைத்