பக்கம்:முன் பனிக் காலம்.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 10] தமிழ் நடிக மணிகளெல்லாம் தத்தம் அநுபவத்திற் கேற்பக் கூட்டியும் குறைத்தும் மேற்கொண்டு நடிக்க வேண்டுமென்று விரும்புவார் பலர் நம் நாட்டில் உளர் என்பது உண்மை. எல்லாவற்றையும் இக் கட்டுரையில்தானே கூறுதல் இயலாதாகலின், எடுத் துக்காட்டாகச் சிலவே இப்பொழுது தரப்படும். ஒருவர் வீரந்தோன்ற நடிக்க வேண்டுமாயின், முதலிற் புருவத்தை வளைத்துக்கொள்ள வேண்டும். அவரது கண் சிவக்க வேண்டும்;அவர் பல்லைக் கடிக்க வேண்டும்; உதட் ைமடித்துக்துெ ※ ب : نه. வேண்டும்; தின்னென்க்"கம்பீர்க்ச் சொல்லைச் சொல்ல வேண்டும். எதிரிகளை இலட்சியஞ் செப்யாத குறிப்புத் தோன்ற வேண்டும். இன்னும் இவை போல்வன பிறவற்றையும் காட்டவேண்டும். தமது. அச்சம் தோன்றுமாறு ஒருவர் தடிக்க வேண்டும்ாயின், தமது உடம்பு இடுங்குவது போன்று காட்டவேண்டும். அவ்ர் நிற்கும் நிலையிலேயே அவரது நடுக்கம் தோன்ற வேண்டும். கண்கொட்ட வேண்டும். கையை எதிரே நீட்டி மறுப்பது போன்று காட்ட வேண்டும். சுற்றி முற்றிப் பார்க்க வேண்டும். இவை போல்வன பிறவுங் கைக்கொள்ள வேண்டும். தமது விப்ப்புத் தோன்றுமாறு ஒருவர் நடிக்க வேண்டுமாயின், சொற்கள் பல கொட்டக் கூடாது: பாடக்கூடாது. ஆ ஆ என்பன போன்ற குறிப் பொலிகளை எழுப்ப வேண்டும். சொல் வராமல் தவிப்பது போற் காட்ட வேண்டும். கை சோசித்தது போலவும், புளகாங்கிதம் உண்டானது போலவும் நடிக்கவேண்டும்.