பக்கம்:முன் பனிக் காலம்.pdf/109

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 நாடகத் தமிழ் தாமுற்ற காமத்தைக் காட்ட நினைக்கின்றவர் தாம் விரும்பியிiரிடத்தில் செல்லும் கடைக்கண் நோக் கத்தையும், புன்முறுவலையும், மலர்ந்த முகத்தையும் உடைய்வராக நடிக்க வேண்டும். பணிந்த மொழி க்ள்ைக் கூறுவது அன்னார் இயல்பு. தாம் துன்பப்படுவதாகக் காட்டி நடிப்பவர் கவலை நிரம்பிப்வ்ராய்க் கண்ணிர் செர்ரிதல் இயல்பு. வாட்டம் உற்றவர் போலவும், நடக்க முடியாத்வர் போலவும், பல்மிழ்ந்தவர் போலவும் நடத்த்லும் இருத்தலும் பொருந்தும் சொல் தடைப்பட்டு வருவதாற் குற்ற மில்ல்ை. வெகுளியைக் காட்டக் கருதுகின்றவர் வாயை மடித்துக்கொண்டு புரு வ த்தை த் துடிக்கவிட வேண்டும், சுட்டு விரலை நீட்டிப் பேசலாம். ஒரு கையை மற்றொரு கையொடு தட்டி விட்ட்ேனா பார்” எனப் பேசலாம். அவரது கண் சிவ்க்க வேண்டும். மேனியில் வேர்வ்ை தோன்ற வேண்டும். விடமுண்டவர் போல் நடிக்க அவாவுவோர் பல் கிட்டி விட்டதுபோற் காட்ட வேண்டும். வாயில் பஞ்சைப் போல நுரை, சேரும்படி செய்ய வேண்டும். தம்மையே நம்பியுள்ள உற்றார் உறவினர்க்குச் சொல் சொல்வார் போலச் சொல்லாமல் இருத்தல் வேண்டும். சாமி வந்தேறியது போன்று நடிக்க நினைப்போர் கையை வீசலாம்; கலக்கமுடையவராகக் காட்டலாம். உதட்டை மடித்துக்கொள்ளலாம்; பல்லால் வாயினைக் கெளவல்ாம். புருவத்தைத் துடிக்கவிடலாம். அசைந்து ஆடலாம். முகத்தில் செந்நிறம் தோன்றும்படி