பக்கம்:முன் பனிக் காலம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. முன்பனிக் காலம் ஆங்காங்கே முன்பனிக் காலத்திற்கு உரியனவாகச் சொல்லி இருப்பது பாராட்டத்தக்கது. அவை பற்றிய செய்திகளை அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை முதலான பண்டைத் தமிழிலக்கியங்களிற் பரக்கக் காணலாம். புலவர் சிலர் இப் பூக்களைத் துணையாக வைத்துக்கொண்டு பிறிதொரு கருத்தைக் குறிப்பாகத் தெரிவிப்பதுண்டு. அவ்வாறு அ ைம த் த பாட்டு ஒன்றைப் பார்ப்போம். தலைவன் பிரிந்திருக்கிறான். அவன் திரும்பி வருவதாகச் சொல்லிச் சென்ற முன் பனிக்காலம் வந்துவிட்டது. அவன் விரைவில் வந்து விடுவான் என்று தோழி தலைவிக்கு வற்புறுத்திச் சொல்கிறாள். அவ்வேளையில், தலைவி குறிப்பாகச் சொல்வதைக் கவனிப்போம். மலைப் பக்கத்திலேயுள்ள தினைப்புனத்திற் குறவனுடைய சிறிய தினையை அரிந்த மறுகாலிடத்தில் அவரைக்கொடி பூப்பதாகிய முன்பனிக் காலத்தில் வாராத என் கணவர்,-முன் னெல்லாம் அழுத கண்ணிர் துடைத்தவர்-இப் பொழுது வரக் காணேனே, எத்தன்மையை உடைய ராயினாரோ என்று தலைவி கூறியது போலக் குறுந் தொகையில் ஒரு பாட்டு உண்டு. "யாராகுவர்கொல் தோழி! சாரற் பெரும்புனக் குறவன் சிறுதினை மறுகால் கொழுங்கொடி யவரை பூக்கும் அரும்பனி யச்சிரம் வாரா தோரே' எனக் கடுவன்மள்ளனார் பாடியது அப் பாட்டு. இதி லுள்ள குறிப்பினால் யாது அறியப்படுகிறது ? பிரிந்து சென்ற கணவன் முன்பு மனைவியிடத்தில் இன்பம் பெற்றவாறே மீண்டும் வந்து இன்பம் பெறத் தக்கவன்