பக்கம்:முன் பனிக் காலம்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 103 செய்ய முடியுமானாற் செய்யலாம். ஒருவிதப் பெரு மித உணர்ச்சி அவர்பால் இருத்தல்வேண்டும். கள்ளினால் அல்லாமல் வேறு கார்ணத்தால் மயக் கம் அடைந்தது போன்று நடிக்க முன் வருபவர் பல்லை மென்று நாக்கை இறுகும்படி செய்ய வேண்டும். வாயில் நுரை சேர்த்து வாய்ை மூடியபடி இருத்தல் வேண்டும். கண்ணாற் பார்ப்பது போலத் தோற்றச் செய்து பாராதவர் போல இருத்தல் வேண்டும்: தம்மைப் பார்ப்பவருக்கு ஏதோ உரைக்க நினைப்பது போல வாயை எடுத்து உரைக்காமல் இருக்க வேண் டும். முகம் மழுங்கித் தோன்றவேண்டும். நாணம் என்பதைக் காட்ட எண்ணுகிறவர் தலை யைக் கீழே தொங்க்விட வேண்டும். முகத்தில் வாட்ட் மும், உடம்பிற் கோட்டமும் காட்ட வேண்டும். கீழ்க் கண் நோக்கத்தை புடையவராய் இருத்தல் வேண்டும். தலைவலி புள்ளவர்போல் நடிக்க விரும்புபவர் நெற்றியைப் பெருவிரல்ாற். . பிடித் துக்கொள்ள் வேண் டும். தலையாட்டம் உடையவராய் இருத்தல்.வேண்டும். கண்ணிற் கொஞ்சம் ஒடுக்கம் காட்டல் நன்று. இவை போன்ற குறிப்புக்கள் சிலப்பதிகாரம் முத லிய தமிழ் நூல்களிலிருந்து நம்க்குக் கிடைக்கின்றன. 3. நாடகம் என்பது கதையைத் தழுவி நடைபெறுங் கூத்தாகும். நாடகத்திற்கு அடிப்படையாய் வேண்டப் படுவது ஒவ்வோர் உணர்ச்சிக்கும் உரிய மெய்ப் பாடாம். பழங்காலத்தில், பேச்சின்றி வெறும் அவி