பக்கம்:முன் பனிக் காலம்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடகத் தமிழ் 105. 1891 மார்ச்சு மாதத்தில், திரு. சுந்தரம் பிள்ளை *மனோன்மணியம்’ என்னும் நாடகத்தை வெளியிட் டார். லார்டு லிட்டன் என்பார் ஆங்கிலத்தில் இயற்றிய "இரகசிய வழி (The Secret Way) என்னும் பாச் செய்யுளை ஒட்டி அந்நாடகக் கதை எழுதப்பட்டது. ஆயினும் அதனில் வரும் பாத்திரங்கள் எல்லாம் தமிழ் நாட்டார் போலவே ஆக்கப்பட்டுள்ளனர்; சிந்தனை யெல்லாம் தமிழ் நாட்டுச் சிந்தனை போலவே சேர்க்கப் பட்டிருக்கின்றன. நாடக ஆசிரியர் தத்துவப் போத, காசிரியர் ஆதலால், தமது அரிய நுண்ணிய கருத்துக் களையெல்லாம் சுந்தர முனிவர் என்னும் பாத்திரத் தின் வாயிலாப் வெளியிட்டுள்ளார். தத்துவ சோதனை செய்வாருக்கு அந்நாடகம் ஒரு பெரிய உருவகமாகக் காண்ப்படும். அந்நாடகம் உரைநடையில் அல்லாமல் செய்யுள் நடையில்தான் எழுதப்பட்டிருக்கிறது. சில இடங்களிற் செய்யுட் பாகம் உரைநடையைப் போல எளியதாகவே இருந்தாலும், அந்நாடகத்தை அப் படியே நடிப்பது என்பது இயலாது. ஆசிரியர்தாமும் அதனை நடிப்பதற்காக எழுதினவர் அல்லர்: படித்து இன்புறுதற்கென்றே எழுதினார். 'பரிதிமாற் கலைஞர்” என்ற வி. கோ. சூரிய நாராயண சாஸ்திரியார் இயற்றிய நாடகங்களில் ரூபா வதி, கலாவதி ஆகியவை பெரும்பாலும் உரைநடை யால் இயன்றன. இடையிடையே பல பழஞ்செய்யுட் களையும் புதுப் பாடல்களையுஞ் சேர்த்துக் கற்றோரும் மற்றோரும் மகிழும் வண்ணம் இவற்றைச் சாஸ்திரியார் இயற்றினார். இவர் இயற்றிய மற்றொரு நாடகம் மான விஜயம் என்பது. சோழன் செங்கணானாற் சிறைப்