பக்கம்:முன் பனிக் காலம்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

互06 காடகத் தமிழ் படுத்தப்பட்ட சேரமான் கணைக்கால் இரும்பொறை, மானங் காரணமாகத் தண்ணீரும் குடிக்காமல் உயிர் விட்ட கதையைப்பற்றியது . இந்நாடகம். இதனுள், வாத்திரங்க்ளின் உயர்வு த்ாழ்வுகளுக்குத் தக்கபடி செய்யுள் நடை வேறுபடுவது நோக்கத் தக்கது. ப்ொய்கையார் என்னும் புலவர் பேசும்போது, 'கதனெழ உரைப்பினுங் கட்டுரை யாமோ ? என்னுடல் உறையும் இன்னுயி ராகிய என்னைச் சிறையுன் இட்டனை கொல்லோ ? என்சிறைக் கோட்டம் என்னுடல் ஆமிால்?” என்று. சற்றுக் கடினமாகவே உர்ைக்கின்றார். சேரனைப் பற்றிச் சி ைறக்ா.வ ல ர் தம்முள் ப்ேசிக்கொள்வது மிக்கி எளிய நடையில் அமைக்க்ப்பட்டிருக்கிறது. உதாரணமாக, 'குடிக்கத் தண்ணி ர் கொண்டுவரச் சொன்னார்' என்று ஒருவர். சொல்லியதைக் குறிப்பிடலாம். ஒடிப்போப்ே ஒருநொடிக் குள்வா நாடிப் பேசடா, நல்லவ ரேயிவர்', ' என்பன போலச் சில பகுதிகள் எளியனவாய் இருந் தாலும், மிான விஜயம் என்னும் நாடகத்தைப் பாமர மக்கள் மகிழும்வண்ணம் நடித்துக்காட்டல் முடியாது. எனினும், அந்நாடகம் புலவர் குழாங்களில், பல்கலைக் கழகத் தமிழ் மாணவரிடையில் நடித்துக் காட்டவுங் கூடும் என்று கூறலாம். திரு. தி. இலக்குமணப் பிள்ளை எழுதிய நாடகங் களில், “இரவி வர்மன்’ என்பது ஒரு வரலாற்று நாட கம். இதன் கதை 13-ஆம் நூற்றாண்டில். திருவிதாங்